கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் திடீர் மாயம்: கணவர் போலீசில் புகார்

ரம்யா டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் திடீர் மாயம்:  கணவர் போலீசில் புகார்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் குரு குமார் (வயது 26). இவர் சென்னையில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (25) டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற தாகவும், இது நாள் வரை குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா கள்ளக்குறிச்சி அருகே மாமானந்தல் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் குரு குமார் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியை தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குரு குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டி இருப்பது தெரியவந்தது. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குரு குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com