search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surplus Water"

    • சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணை யில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழை காலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒரு போக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கல்வராயன்மலை பகுதியில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 42.2 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடி என்ப தால் இன்னும் அணை நிரம்ப 3.8 அடி மட்டுமே உள்ளது. கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் பருவ மழையின் போது அடிக்கடி அணை திறக்கவும், அதனால் கோமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி 360 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் 220 கனஅடி உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தால் பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சியில் 20, தியாகதுருகம் 30, விருகாவூர் 25, சின்னசேலம் 12, அரியலூர் 38, கடுவனூர் 46, கலையநல்லூர் 28, கீழ்பாடி 7, மூரார்பாளையம் 37, மூங்கில்துறைப்பட்டு 27, ரிஷிவந்தியம் 15, சூளாங்குறிச்சி 46, வடசிறுவலூர் 32, மாடாம்பூணடி 9, மணலூரபேடடை 39, திருக்கோவிலூர் 21, திருப்பாலபந்தல் 15, வேங்கூர் 14, ஆதூர் 7, எறையூர் 6, ஊ.கீரனூர் 13 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூர் மற்றும் சூளாங்குறிச்சியில் 46 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக எறையூரில் 6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 487 மி.மீட்டராகவும், சராசரி 23.20 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
    • காவிரி நீர் காளிப்பட்டி வந்தடைந்தது பா.ம.க.வினர் மலர்கள் தூவி வரவேற்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரைஅடுத்த திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரி நீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து நேற்று காலை காவிரியாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது.

    இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி யினர் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி ராஜ சேகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் துரைராஜ், மேச்சேரி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் ,சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MetturDam #EdappadiPalaniswami
    சேலம்:

    எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும், பிற கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்ய அதிமுக தயாராக இல்லை என்றும் கூறினார்.



    ‘மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு அணை உடையும் அபாயத்தில் உள்ளதாக கூறுவது தவறான கருத்து. முக்கொம்பு பகுதியில் புதிய அணை கட்டப்படும்’ என்றும்  முதலமைச்சர் தெரிவித்தார். #MetturDam #EdappadiPalaniswami

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×