என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dispute over firecrackers"

    • ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர்.
    • சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்( வயது 29) இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர். பட்டாசின் சத்தத்தால் எரிச்சல் அடைந்த சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் வேறு எங்கேயாவது போய்வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சங்கரின் மனைவியை ஆபாசமாக திட்டி கல்லால் அடித்ததில் சங்கரின் மனைவிக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கரின் மனைவி சேர்க்கப்பட்டார் .இதுகு றித்து கச்சிராயபளையம் போலீசில் சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் வழக்கை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×