என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் ஊராட்சியில் சமூதாய கூடம் அருகே மொளச்சூர் கற்பகவள்ளி நகர் பகுதியை சேர்ந்த டென்னி கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தார். செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரூபன், மொளச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அரி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் ரூபன் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்களும் டென்னியும் நண்பர்கள். அனைவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். இரவில் ஒன்றாக மது அருந்துவோம். சம்பவத்தன்று எங்களிடம் மது அருந்த பணம் இல்லை. டென்னியிடம் பணம் கேட்டோம். அவன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வேறு நபருடன் மது அருந்தி இருந்தான்.
எங்களுக்கு பணம் தர மறுத்து வேறு நபருடன் மது அருந்துவதை பார்த்த உடன் ஆத்திரத்தில் நானும் எனது நண்பர்கள் வெங்கடேசன், அரி ஆகிய மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறினார்.
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. அது சந்திரனுக்கு அருகே சென்று சுற்றியபடி, சந்திரனை பற்றிய பல தகவல்களை பூமிக்கு அனுப்பியது.
அடுத்த கட்டமாக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த திட்டம் ரூ.800 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சந்திரயான்-2 விண்கலத்தை அடுத்த மாதம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதுபற்றி விண்வெளி ஆய்வுத்துறை இலாகாவை கவனிக்கும் பிரதமர் அலுவலக விவகார துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கடந்த 16-ந் தேதி நிருபர்களிடம் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும், அதில் உள்ள இறங்கு வாகனம் சந்திரனின் தென் பகுதியில் தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்திய நிபுணர்கள், விண்கலத்தில் மேலும் சில சோதனைகளை நடத்த யோசனை தெரிவித்து உள்ளனர். எனவே ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஐ.ஆர்.என்.எஸ். செயற்கை கோள் ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கிறது. வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ஜி.சாட்-6 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் செயலி தயாராகிக்கொண்டு இருக்கிறது. மீனவர்கள் பயன்படுத்துகின்ற வகையில் இது ஏப்ரல் மாதம் வழங்கப்படும்.
நமது நாட்டிற்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக தற்போதைய பாடத்திட்டங்களை மாற்ற தேவையில்லை. மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் சாந்தி (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்துவந்தார். இந்த அழகு நிலையத்திற்கு சென்னை கோடம்பாக்கம், அஜித் நகரை சேர்ந்த பைனான்சியர் ஜெகன்(28) என்பவர் அடிக்கடி வந்துசென்றார்.
அப்போது வாடிக்கையாளர் என்ற முறையில் ஜெகனுக்கும், சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி ஜெகன், சாந்தியை பலவிதங்களில் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையென்றால் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று கூறி மிரட்டிவந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாந்தி வீட்டிற்கு நண்பர்களுடன் வந்த ஜெகன், மீண்டும் சாந்தியை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். பின்னர் சாந்தி அணிந்து இருந்த செயின், கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் படங்களை இணையதளத்தில் ஆபாசமாக வெளியிடுவேன் என கூறி மிரட்டிவிட்டு ஜெகன் தனது நண்பர்களுடன் சென்றுவிட்டார்.
இதனால் செய்வதறியாது திகைத்த சாந்தி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் குன்றத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சாந்தியை வைத்தே ஜெகனை பிடிக்க முடிவு செய்தனர். சாந்தியை செல்போனில் ஜெகனிடம் பணம் கொடுப்பதாகவும், குன்றத்தூரில் வந்து வாங்கிக்கொள்ளும்படியும் பேசவைத்தனர்.
அதனை உண்மை என்று நம்பிய ஜெகன் நேற்று தனது நண்பர்கள் ஆலந்தூரை சேர்ந்த தேவ்சரண்(28), கிருஷ்ணன்(20) ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு தனது சொகுசு காரில் வந்தார். வீட்டின் அருகே நின்றிருந்த சாந்தியிடம் பணத்தை வாங்க முற்பட்டபோது மாறுவேடத்தில் மறைந்திருந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் ஜெகன் உள்ளிட்ட கும்பலை கைது செய்தனர்.
போலீசார் அவர்கள் அனைவரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். சாந்தியின் மீது உள்ள மோகத்தில் அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஜெகன் தெரிவித்தார். 3 பேர் மீதும் பெண் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
போரூர்:
விருகம்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்தவர் ரகுராஜ். கடந்த 16-ந்தேதி காலை இவரது வீட்டிற்கு நான்கு பேர் காரில் வந்தனர்.
அவர்களில் ஒருவர் ரகுராஜிடம் தான் மிகவும் சக்தி வாய்ந்த சாமியார் என்று கூறினார். மேலும், “உங்களது குடும்பத்துக்கு மிகப்பெரிய தோஷம் உள்ளது. அதை போக்கி ஆயுள் விரக்தி அடைய இன்றே ஒரு பரிகார பூஜை செய்ய வேண்டும். இதற்கு ரூ.95 ஆயிரம் செலவு ஆகும்” என்றார்.
இதனை நம்பிய ரகுராஜ் தோஷம் கழிக்க பூஜை செய்ய ஒப்புக் கொண்டார். உடனே சாமியார் உள்பட 4 பேரும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டும் என கூறி ரூ.5 ஆயிரத்தை ரகுராஜிடம் இருந்து பெற்றுகொண்டு வெளியே சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரகுராஜ் இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி சாய் நகரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது சிகப்பு நிற கார் ஒன்று வந்து சென்றது தெரிந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து தலைமறைவான 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் விருகம்பாக்கம் நடேசன் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிகப்பு நிற காரை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் போளூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜேந்திரன் என்பது தெரிந்தது. பிரகாஷ் போலி சாமியாராக நடித்து ரகுராஜிடம் பணம் பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து பிரகாஷ், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3500, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளான திருக்கோவிலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்கள் வயதானவர்கள் தங்கி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தோஷம் இருப்பதாக கூறி பல இடங்களில் நூதன முறையில் பணம் பறித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போலீஸ்காரர்கள் சின்னத்துரை, மகேந்திரபாபு ஆகியோர். ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவன் தண்டையார்பேட்டை திலகர் நகரை சேர்ந்த கணேஷ் எனபதும் அவன் வைத்திருந்த மூட்டையில் பித்தளை குத்துவிளக்களும் இருந்தன.
இதனை அவர் திருடி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு மற்றும் 35-வது வார்டு பகுதிகளில் அண்ணாநகர், என்.எஸ்.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அங்குள்ள வீடுகளுக்கு பைப் மூலம் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் டேங்கர் லாரிகள் மூலம் குறைந்த அளவு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குமரங்குன்றம் பகுதியில் பல்லாவரம்-அஸ்தினாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்துமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாதவன் (65).
இவர் நேற்று இரவு கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினார்.
இரவு 10.30 மணிக்கு தனது அறைக்கு சாப்பாடு அனுப்பும்படி கூறி இருந்தார். அதன்படி ஓட்டல் ஊழியர்கள், சைவ உணவுகளை மாதவனின் அறைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் தனக்கு அசைவ உணவு வேண்டும் என்று மாதவன் கூறினார். ஓட்டல் சமையலறை மூடப்பட்டு விட்டதால் அசைவ உணவு இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாதவன் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்தார்.
இதையடுத்து அவரை ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கத்திடம் அழைத்து சென்றனர். அவரிடமும் மாதவன் தகராறில் ஈடுபட்டார். தான் ஓட்டல் அறையை காலி செய்வதாக மாதவன் கூறினார். அப்போது கை கலப்பு ஏற்பட்டது.
திடீரென்று ஆவேசம் அடைந்த மாதவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஓட்டல் ஊழியர்களை நோக்கி சுட்டார். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் துப்பாக்கி குண்டுகள் படவில்லை.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கம் கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று மாதவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ராணுவ கண்காட்சியையொட்டி பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகள், ரிசார்ட்டுகளின் உரிமையாளர்களுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதிகளில் தங்க வருவோரிடம் ஆதார் கார்டு கண்டிப்பாக வாங்க வேண்டும். அதை உடனடியாக பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும். விடுதியில் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் டி.எஸ்.பி.சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் மது விலக்கு அமலாக்கப் பிரிவின் தலைமை காவலராக பணியாற்றுபவர் சபீராபானு. 2 நாட்கள் விடுமுறை எடுத்து இருந்த சபீராபானு இன்று காலை பணிக்கு வந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
திடீரென்று, போலீஸ் நிலையத்தில் இருந்த கொசு மருந்தை சபீராபானு குடித்தார். இதில் அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற காவலர்கள் சபீராபானுவை மேல் மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என்று அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சபீரா பானுவின் கணவர் ரவி, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. #tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் செட்டித்தெரு பகுதியில் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் வாகன தணிக்கை மேற் கொண்டனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் சின்னகாஞ்சீபுரம் வரதராஜபுரம் தெருவை சேர்ந்த மோகன், காஞ்சீபுரம் திருக்காலிமேடு என்.எஸ்.கே.நகரை சேர்ந்த தாமோதரன், காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கணபதி, அருந்ததி தெருவை சேர்ந்த தினேஷ் என்பது தெரிந்தது.
4 பேரும் காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தல், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று மதியம் மின்சார ரெயில் சென்றது. ஊரப்பாக்கம்- கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென பெட்டிகளின் இணைப்பு சங்கிலிகள் உடைந்துள்ளது. ரெயில் பெட்டிகள் கழன்று இரண்டு பகுதியாக பிரிந்து நடுவழியில் நின்றதால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இணைப்பு துண்டாகி பிரிந்த இரண்டு பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அந்த ரெயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த விபத்து காரணமாக, புறநகர் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. #Tamilnews
தாம்பரம்:
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை 11.30 மணிக்கு ஒரு மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
11.35 மணியளவில் கூடுவாஞ்சேரி- ஊரப்பாக்கம் இடையே ரெயில் சென்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு துண்டானது.
இதனால் ரெயில் 2 பகுதிகளாக பிரிந்தது. ரெயிலில் என்ஜினுடன் சேர்ந்து இருந்த பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றன.
துண்டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் பின்னால் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதை அறிந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பீதியில் அலறினார்கள். அவர்கள் ரெயிலில் இருந்து இறங்கி பஸ்களில் சென்றனர்.
இதுகுறித்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் இருந்து கழன்ற பெட்டிகள் 12.30 மணியளவில் இணைக்கப்பட்டன. அந்த ரெயில் கூடுவாஞ்சேரியில் நிறுத்தப்பட்டது. #tamilnews






