என் மலர்
செய்திகள்

தாம்பரம் அருகே பெட்டிகள் இணைப்பு கழன்றதால் 2 ஆக பிரிந்த ரெயில்- பயணிகள் அலறல்
தாம்பரம்:
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை 11.30 மணிக்கு ஒரு மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
11.35 மணியளவில் கூடுவாஞ்சேரி- ஊரப்பாக்கம் இடையே ரெயில் சென்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு துண்டானது.
இதனால் ரெயில் 2 பகுதிகளாக பிரிந்தது. ரெயிலில் என்ஜினுடன் சேர்ந்து இருந்த பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றன.
துண்டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் பின்னால் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதை அறிந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பீதியில் அலறினார்கள். அவர்கள் ரெயிலில் இருந்து இறங்கி பஸ்களில் சென்றனர்.
இதுகுறித்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் இருந்து கழன்ற பெட்டிகள் 12.30 மணியளவில் இணைக்கப்பட்டன. அந்த ரெயில் கூடுவாஞ்சேரியில் நிறுத்தப்பட்டது. #tamilnews






