என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டில் விவசாயிக்கு கத்திகுத்து
    X

    செங்கல்பட்டில் விவசாயிக்கு கத்திகுத்து

    செங்கல்பட்டில் வீட்டுமனை தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த பி.வி.களத்தூரை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கோபாலுக்கும் வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. 

    இது தொடர்பாக நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை குத்தினார். பலத்த காயம் அடைந்த முருகேசனுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான கோபாலை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×