என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    போரூரில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    அரும்பாக்கம் ஜெய்நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பார்த்த சாரதி (வயது 55) செக்யூரிட்டி கிரைம் பிரிவு சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று போரூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் இரவு 8மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக போரூர் மார்க்கெட்டிற்கு சென்றபோது பார்த்தசாரதி தீடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பார்த்த சாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஆண்டில், தன்னை பெற்றோர் ஏற்காததால் விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயல் ராஜீவ்காந்தி நகர், 13-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஞானபிரகாஷ்(வயது 27). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி(25). இவர் கள் இருவரும் காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    பிரகாஷ், கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக புனேவுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் பேசுவதற்காக செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் காயத்ரி செல்போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், பக்கத்து வீட்டினரை தொடர்புகொண்டு தனது வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி அவர்கள் சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

    இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு காயத்ரி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது கணவர் பிரகாஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பிரகாஷ், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காயத்ரியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் தங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

    கணவன்-மனைவி மட்டும் மதுரவாயல் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆனால் இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுவரையிலும் அவர்களை வந்து பார்க்கவில்லை என தெரிகிறது.

    தற்போது வேலை விஷயமாக கணவர் பிரகாசும் 5 நாட்களாக வெளியூர் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த காயத்ரி, காதல் திருமணம் செய்ததால் தன்னை பெற்றோர் ஏற்கவில்லையே என்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    எனினும் அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? எனவும், மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயத்ரிக்கு திருமணம் ஆகி 1 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
    செங்கல்பட்டில் பஸ் டெம்போவை சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பழைய டயர், பிளாஸ்டிக் கழிவு குவிந்து இருந்தை கண்ட அதிகாரிகள் பஸ் உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    கொசுக்களால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உருவாவதை தடுக்க செங்கல்பட்டு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    செங்கல்பட்டு 33-வது வார்டு அண்ணாநகரில் 6-வது தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ் டெப்போவை சுகாதார துறை அதிகாரி சித்ரா சேனா தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், மேற்பார்வையாளர் ஜெயதேவி, கொசு ஒழிப்பதற்கான பெண்கள் சுயஉதவிக்குழு ஊழியர்கள் பார்வையிட்டனர்.

    அப்போது நீண்ட நாட்களாக பழுதடைந்து நிற்க வைக்கப்பட்டுள்ள பஸ், பிளாஸ்டிக் கேன்கள், பஸ் டயர்கள், பஸ் இருக்கை கள், நாற்காலி போன்ற பொருட்களை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

    எங்கள் பஸ் செட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தர விடுவதற்கு நீங்கள் யார் என்று கேட்டு அவர்களை பஸ் முதலாளி மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உள்பட 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, நகராட்சி கமி‌ஷனர் மாரிச்செல்வி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பஸ் செட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு கொட்டிக்கிடந்த பிளாஸ்டிக் கேன்கள், டயர்கள், பஸ்சின் இருக்கைகள், ஒரு வருடத்துக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கும் பஸ் ஆகியவற்றை கண்டனர்.

    இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தனியார் பஸ் டெப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்றும் பஸ் டெப்போவுக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டார்.

    ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சுகாதாரத்தை பேண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். டெங்கு உற்பத்தி அறிகுறிகளை அழிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டருடன் சுகாதார அதிகாரிகள் சென்றனர்.

    காஞ்சீபுரம் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    சென்னை மண்ணடி கோதல் மெர்சாட் தெருவை சேர்ந்த ஜாவித், பைசல், ரைஸ் ஆகியோர் தங்களது உறவினர்கள் 6 பேருடன் இன்று அதிகாலை காரில் ஏலகிரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை பைசல் ஓட்டிச் சென்றார்.

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே சின்னப்பன்சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதனால் கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்து சென்றது.

    அப்போது எதிரே வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஆசிப், யாகூப், இம்தியாஸ், முகமது யாசிப், இன்ஷார் இர்பான், இன்ஷா ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த 6 வாலிபர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தாம்பரம் அருகே பேராசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளிஸ்வரி. தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் திருமலை (வயது 24), ரகுமான் (25). நண்பர்களான இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    தினமும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    நேற்று இரவு அவர்கள் வேலைக்காக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    நாவலூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வந்த போது, பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த திருமலை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ரகுமான் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    அவரை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விபத்து நடந்த இடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சின்ன காஞ்சீபுரம் அருகே மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி நூலகர் தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் நாகலூத்து தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42, இவர் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கத்தில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்.

    திடீரென நூலகர் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

    தற்கொலை குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #ChengalpattuRegistrarOffice
    செங்கல்பட்டு:

    மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் செங்கல்பட்டில் இயங்கி வருகிறது.

    இங்கு நேற்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் போல் மாறு வேடத்தில் அலுவலகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை 5 மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்திற்குள் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கதவை அடைத்தனர்.

    அங்கு இருந்த அனைவரையும் சோதனையிட்டனர். அலுவலகத்திற்கு உள்ளே இருந்த அனைவரையும் வெளியே விடவில்லை. மேஜை டிராயர்கள், கோப்புகள் உள்ள அறைகள் அனைத்தையும் இன்று அதிகாலை 3 மணிவரையில் விடிய விடிய சோதனை செய்தனர்.

    பத்திரபதிவாளர் செந்தூர் பாண்டியனின் காரை துருவி, துருவி சோதனையிட்டனர். அப்போது மேஜையிலும், கோப்புகள் அறையிலும் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பத்திர பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களை இரவு 10 மணி வரைக்கும் பத்திர பதிவு செய்ய அனுமதித்தனர். ஆன்லைனில் பத்திர பதிவுக்கு விண்ணப்பித்த இவர்களை வரிசை எண் பிரகாரம் பதிவாளர் செந்தூர் பாண்டியன் பதிவு செய்தார். பத்திர பதிவின் போது சொத்தை வாங்குபவர்களும் மற்றும் சாட்சியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை கண்ட புரோக்கர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். எப்போதும் புரோக்கர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் பத்திர பதிவு அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததால் புரோக்கர்கள் யாரும் இல்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. #ChengalpattuRegistrarOffice
    கோழித்தீவன உற்பத்தி ஆலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததையடுத்து காஞ்சீபுரம் கலெக்டர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். #Dengu
    காஞ்சீபுரம்:

    டெங்கு-பன்றி காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு-பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிரடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலு செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரிய பெரும்பாக்கத்தில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ஆலையை உடனடியாக சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலவலர் திருஞானசம் மந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் ஒரகடம் தொழிற்சாலை பகுதிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஏற்கனவே ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது இருந்தார். #Dengu
    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் மற்றும் ஒரு வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது.

    இதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற தாசில்தார் கல்யாணி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமித்து கட்டி இருந்த 10 கடைகள், ஒரு வீட்டை இடித்து அகற்றினர். பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×