என் மலர்
செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஆண்டில், தன்னை பெற்றோர் ஏற்காததால் விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
சென்னை மதுரவாயல் ராஜீவ்காந்தி நகர், 13-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஞானபிரகாஷ்(வயது 27). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி(25). இவர் கள் இருவரும் காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பிரகாஷ், கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக புனேவுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் பேசுவதற்காக செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் காயத்ரி செல்போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், பக்கத்து வீட்டினரை தொடர்புகொண்டு தனது வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி அவர்கள் சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.
இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு காயத்ரி, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது கணவர் பிரகாஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரகாஷ், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காயத்ரியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் தங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.
கணவன்-மனைவி மட்டும் மதுரவாயல் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆனால் இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுவரையிலும் அவர்களை வந்து பார்க்கவில்லை என தெரிகிறது.
தற்போது வேலை விஷயமாக கணவர் பிரகாசும் 5 நாட்களாக வெளியூர் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த காயத்ரி, காதல் திருமணம் செய்ததால் தன்னை பெற்றோர் ஏற்கவில்லையே என்ற விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? எனவும், மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயத்ரிக்கு திருமணம் ஆகி 1 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Next Story