என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தாம்பரம் அருகே காரில் குட்கா-புகையிலை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே புற வட்டச் சாலையில் நேற்று இரவு பீர்க்கன்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை நோக்கி வந்த காரில் சோதனை செய்தபோது அதில் 250 கிலோ குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காரில் இருந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் இருந்து குட்கா, புகையிலை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூரில் தொடர்புடைய குட்கா வியாபாரிகள் யார்-யார்? இங்கு எந்தெந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலின் நாகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். #PonRadhakrishnan #MKStalin #BJP #Congress
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து டெல்லியில் உள்துறை, நிதித்துறை, வேளாண்மைத்துறை, பெட்ரோலிய துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறை, வணிகத்துறை மந்திரிகளை சந்தித்து எந்தெந்த துறை மூலமாக நிவாரணம் பெறமுடியுமோ அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்ததும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை அந்தந்த துறை மந்திரிகளின் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கப்போவது பற்றி அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்-மந்திரிகள் வரவேற்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி சேர இருந்த கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டன.

    கருணாநிதி சொன்னார் என்றால் அவரது தலைமை எப்படிப்பட்டது என்பது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியும். கருணாநிதி செய்த விஷயங்களை ஒப்பிட்டு ஸ்டாலின் செய்யப்போவதாக சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அப்படி காங்கிரஸ் கட்சி சொல்லச் சொன்னதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    ‘சாடிஸ்ட்’ என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது சீக்கிய சகோதரர்களை தேடிக் கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு ‘சாடிஸ்ட்’ என்று சொல்லலாமா? ‘சாடிஸ்ட்’ என்பது காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். ஸ்டாலினை விட ‘சாடிஸ்ட்’ வேறு யார் இருக்க முடியும்.



    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த துயர சம்பவங்களை பேசலாமா? தயவு செய்து ஸ்டாலின் நாகாக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக்கொள்வீர்கள். சாடிஸ்ட் என்ற வார்த்தை கண்ணாடியை பார்த்து துப்பியதற்கு சமம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #MKStalin #BJP #Congress
    காஞ்சீபுரம் அருகே விபத்தில் 3  பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    சென்னை போரூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ஜெகதாம்மாள் (வயது 58).

    இவர்களது உறவினரான காஞ்சீபுரத்தை அடுத்த நாயகன்குப்பதை சேர்ந்த ஒருவரது 3 மாத குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது.

    இதுபற்றி துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை ஜெகதாம்மாள், அவரது மகன்கள் வள்ளியப்பன், நாகேந்திரன், அவரது மனைவி சித்ரா (30) உள்பட 7 பேர் காரில் புறப்பட்டனர். காரை மாங்காடை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டினார்.

    அதிகாலை 4 மணி அளவில் காஞ்சீபுரம் - ஓரகடம் சாலையில் கட்வாக்கம் கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வாலாஜாபாத்தில் இருந்து ஓரகடம் நோக்கி வந்த லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி நசுங்கியது. காரில் இருந்த டிரைவர் சக்திவேல், ஜெகதாம்மாள், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் வள்ளியப்பன், நாகேந்திரன், அஞ்சுகம், விஜயலட்சுமி, அவரது மகள் ரபியா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற பஸ் மரத்தில் மோதிய விபத்து 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 60 பக்தர்களுடன் பேருந்து திருவண்ணாமலை வழியாக வந்தவாசிலிருந்து சோத்துபாக்கம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வந்தவாசி சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக செண்டிவாக்கம் என்ற இடத்தில் பஸ் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேல் மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் இரவு வேளையில் டிரைவர் பஸ்சை இயக்கி வந்ததாகவும் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
    தாம்பரம் அருகே மணல் லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29).

    இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் ரஞ்சித் குமாருடன் படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கரசங்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியர் சந்தோஷ் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

    படுகாயம் அடைந்த ரஞ்சித் குமார் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேடி வருகிறார்.

    விபத்தில் மரணம் அடைந்த ஆசிரியர் சந்தோஷ் மனைவி பெயர் பார்கவி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள்தான் ஆகிறது.
    காஞ்சீபுரம் அருகே போலி கையெழுத்து போட்டு சொத்து அபகரித்தது குறித்து பள்ளி தாளாளர் மீது முதல் அவரது முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலை தனியார் பள்ளியில் தாளாளராக இருப்பவர் அருண்குமார்.

    இவருக்கும் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை தேன்மொழிக்கும் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது மகன் கவுதம் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தாய் தேன்மொழியுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் தேன்மொழி தனது மகன் கவுதமுடன் வந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில் தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி முன்னாள் கணவர் அருண்குமார் சொத்தை அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 1992-ம் ஆண்டு ஓரிக்கை பகுதியில் 809 சதுரடி கொண்ட காலி மனையை சொந்த பணத்தில் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த இடம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பத்திரதுறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு ஆவணங்களை பெற்று பார்த்த போது 2004-ம் ஆண்டு முன்ளாள் கணவரான பள்ளி தாளாளர் அருண்குமார் மற்றும் அவருடைய தாயார் மனோகரி இருவரும் சேர்ந்து எனது கையெழுத்தை போலியாக போட்டு முறைகேடாக விற்று இருப்பது தெரியவந்தது.

    எனக்கு சொந்தமான காலிமனையை சட்டவிரோதமாக மோசடியாக அபகரித்த பள்ளி தாளாளர் அருண்குமார் உள்ளிட்ட நபர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவருக்கு உதவிய ஊழியரையும் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் முகமது அக்கீல் என்பவர் மறைத்து கொண்டுவந்த பார்சலை அதிகாரிகளுக்கு தெரியாமல் விமான நிலையத்தில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த ஊழியரான முனீர் என்பவரிடம் கொடுத்தார்.

    இதனை கவனித்த அதிகாரிகள் 2 பேரையும் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதில் அந்த பார்சலில் 500 கிராம் தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    பிடிபட்ட முகமது அக்கீல் கூறும்போது, கடத்தல் தங்கத்தை விமானநிலைய ஒப்பந்த ஊழியர் முனீரிடம் கொடுத்துவிட்டு பின்னர் அதனை விமான நிலையத்துக்கு வெளியே பெற்றுக்கொள்ள இருந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஒப்பந்த ஊழியர் முனீரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

    இதேபோல துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹைத்ரூஷ் என்பவர் லேப்-டாப்பில் மறைத்து கடத்தி வந்த 175 கிராம் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்

    மேலும் ஆவணம் இன்றி கொண்டு வந்த 7 லேப்- டாப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    நேற்று இரவு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ராஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ராஜாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த ராஜா சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கல்பாக்கம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண், வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருக்கும் நகரியம் பகுதி வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து நகைக்கொள்ளை நடந்தது.

    கொள்ளையர்களை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் தனிப்படை அமைத்தார். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அங்கு வீடுகளில் வேலை செய்யும் புதுப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தனிப்படை போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பானிபூரி விற்கும் வட மாநில வாலிபர்கள் இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்பாக்கம் நகரியம் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு அந்த பெண் மூளையாக செயல்பட்டாரா? எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கோவளம்மேடு மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவர் கடந்த 15-ந் தேதி மகன்கள் லோகேஷ் (13), காமேஸ்வரன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.

    அப்போது அவ்வழியே நடந்து சென்ற உறவினர் மகள் தனலட்சுமியை (11) மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். குண்ணம் அருகே வந்தபோது வேகமாக வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சேகர், அவரது மகன் லோகேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தனலட்சுமிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவர் அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது என்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.

    நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.

    அவர் அப்படித்தான் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் அரசியல் அழுத்தம் என்பது நேர்மையான எல்லோருக்கும் உண்டு. அவருக்கும் அழுத்தம் இருக்கும் என்றால் நாம் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


    விஷால் மீது புகார் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர். அவர் மீது கூறப்படும் புகார்கள் உண்மையா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை ஆராய வேண்டும். ஆராய்வதற்கு விஷாலுக்கு மனம் இருக்க வேண்டும்.

    இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.

    சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.

    ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ×