search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maduranthakam accident"

    கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற பஸ் மரத்தில் மோதிய விபத்து 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 60 பக்தர்களுடன் பேருந்து திருவண்ணாமலை வழியாக வந்தவாசிலிருந்து சோத்துபாக்கம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வந்தவாசி சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக செண்டிவாக்கம் என்ற இடத்தில் பஸ் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேல் மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் இரவு வேளையில் டிரைவர் பஸ்சை இயக்கி வந்ததாகவும் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
    மதுராந்தகம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் பைபாஸ், ஏரிக்கரை வழியாக சென்னை நோக்கி நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி சென்றது. லாரியை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தர்சிங் (வயது42) ஓட்டினார். கிளீனராக அமீர்சிங் இருந்தார்.

    அப்போது திடீரென லாரி பழுதானது. 2 பேரும் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்னை நோக்கி சென்ற மற்றொரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி உதவி கேட்டனர்.

    அதில் இருந்த டிரைவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மித்ராசிங்(35) தனது லாரியை, பழுதான லாரியின் முன் பகுதியில் நிறுத்தினார். பின்னர் 2 பேரும் லாரியில் பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரி திடீரென பழுதான லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரியை பழுது பார்த்துக்கொண்டு இருந்த டிரைவர்கள் அரவிந்தர் சிங், மித்ராசிங் ஆகியோர் லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் கிளீனர் அமீர்சிங் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×