என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஈரோடு:

    சுதந்திர தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின மான நேற்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்ப டுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்கப்படுகிறதா? என பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வானது ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் நடத்தப்பட்டது.

    இதில் 88 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள ர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மாற்று விடுப்பு வழங்காமலும் விடுமுறை நாளில் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் பட்டியலை 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமலும் அதன் நகலை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    • கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஆக.16 -

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (55). இவர் சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடைக்கு பின்புறம் பணியாளர்கள் தங்குவதற்கான குடோன் மற்றும் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகைகள் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் செட்டில் வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது.

    நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது விவசாயி மீது கார் எதிர்பாராத விதமாக பலமாக மோதியது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 59). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தங்கமுத்து தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் வருவதற்காக மொபட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக சேலம் மார்க்கம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர் மீது பலமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

    ஈரோடு:

    மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.

    இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

    வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது.
    • இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர்- கேர்மாளம் இடையே உள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (45). வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலத்தில் நேற்று மாலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது. வலியால் அவர் அலறவே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று கரடியை விரட்டினர்.

    பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பழனிச்சாமியை பவானி போலீஸார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பவானி செங்கோடன் டீக்கடை வீதி பகுதிக்கு சென்று உள்ளனர்.

    அப்போது அந்த இடத்தில் கந்தசாமி மகன் பழனிச்சாமி (52) தமிழக அரசு அனுமதியின்றி பல்வேறு வகையான மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி யை பவானி போலீஸார் கைது செய்தனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தீ விபத்தில் குணசேகரனின் இரண்டு ஏக்கர் மற்றும் சிவகுமாரின் ஒரு ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ 1.50 லட்சம் இருக்கும்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வழியாக சென்ற நபர்கள் குடித்துவிட்டு அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் பட்டு தீப்பிடித்தது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் வெள்ளோடு அடுத்துள்ள கருக்கன் காட்டு வலசு கொளத்து தோட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இவரது கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த சிவக்குமார் என்பவர் கரும்புத் தோட்டத்தில் தீ பரவியது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம்பக்கத்து காடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் குணசேகரனின் இரண்டு ஏக்கர் மற்றும் சிவகுமாரின் ஒரு ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ 1.50 லட்சம் இருக்கும்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வழியாக சென்ற நபர்கள் குடித்துவிட்டு அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் பட்டு தீப்பிடித்தது தெரிய வந்தது.

    • கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 1019 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 900 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் தடுப்பு நடவடிக்கைக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் கொடுமுடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவர் ெஜயலட்சுமி, கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கொடுமுடி பேரூராட்சி உதவியாளர்கள் செந்தில், பாஸ்கரன், வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தீயணைப்புத்துறை சரவணன், வனக்காவலர்கள் கீர்த்தனா, துரைராஜ் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மற்றும் மர்ம விலங்கை பிடிக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆடு வளர்ப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

    50 ஆடுகளுக்கு மேல் கால்நடைகள் வளர்ப்ப வர்கள் ஆட்டுபட்டியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி கொள்ள வேண்டும்.

    ஆடுகள் கட்ட ப்பட்டுள்ள இடங்களில் மின்விளக்கு எரிய விட்டால் வனவிலங்குகள் வராது.எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    • 75-வது சுதந்திரதினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் தேசியகொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஆரஞ்ச், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண பலூனை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 பேர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேர், துணை இயக்குனர் குடும்ப நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றி 15 பேர், இணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • க்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை சேமூர் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான தனியார் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுகாதார கேடு நிலவுவதாகவும் பல்வேறுமுறை புகார் அளி த்தும் போதிய தடுப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஈக்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் வயிற்று ப்போக்கு வாந்தி பேதி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அதன் பெயரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கோழிப்பண்ணை உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை பூந்துறை சேமூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    இதில் அதிகாரிகள் தரப்பில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், துணை தாசில்தார் கற்பகம், காவல் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் சுகாதா ரத்துறை சார்பில் மருத்துவர் சக்திவேல் மொடக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி விஜயகுமார் நில வருவாய் ஆய்வாளர் பிரதீப் கிராம நிர்வாக அலுவலர் பூரண சுந்தரி உள்ளிட்டோர் அடங்கிய குழு மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மற்றும் பூந்துறை சேமுர் ஊராட்சி பொதுமக்கள் இந்த சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    பேச்சு வார்த்தையின் முடிவில் அதிகாரிகள் தரப்பில் 7 பேரும் பொது மக்கள் சார்பில் 11 பேரும் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு ப ண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு பண்ணையின் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சமாதான பேச்சு வார்த்தை முடிந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×