என் மலர்
ஈரோடு
- பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
சித்தோடு:
பவானி அருகே உள்ள ஜம்பை கருக்கபாளையம் ரோடு பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவயிடம் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பவானி வடக்கு பள்ளி வீதியை சேர்ந்த செந்தில் (47), பாலக்கரை வீதியை சேர்ந்த கோகுல் (20), ஒருச்சேரிபுதூரை சேர்ந்த கதிர்வேல் (47) பவானி காவேரி வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 4 பேர் வெள்ளை கலரில் 2 சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
- ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
- இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு எல்லீஸ்பேட்டை ஏசுநாதர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதேப்போல் சம்பவத்தன்றும் சாமிநா தனுக்கும், எலிசபத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த எலிசபெத் இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தூங்க சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாமிநாதன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து எலிசபத் கேட்டபோது வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த டெட்டாலை எடுத்து குடித்து விட்டதாக சாமிநாதன் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி, சின்னகவுர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (54). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருணகிரிநாதர் தெருவில் வசித்து வருகிறார். சிவன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவன் சென்னிமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி வந்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் தனது மகனிடம் கூறினார். இதனால் அதிர்ச்சடைந்த ஜெயக்குமார் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.
சென்னிமலை:
செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.
சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.
தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.
அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.
ஈரோடு:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,
ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.
- இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது.
- காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்பட்டு அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள்.
இதனால் வீட்டின் கதவுகளை பொதுமக்கள் மூடி கொண்டு வெளியே வர தயங்குகின்றனர்.அந்தியூர் அருகே உள்ள நகலூரை யொட்டி உள்ள வனப்பகுதியான கொம்பு தூக்கி வனப்பகுதியில் இருந்து இந்த காட்டுப் பன்றிகள் ெவளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு பன்றிகள் பெருமாள் பாளையம், முனியப்பன் பாளையம், ஈச்சப்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் பகல் நேரங்களில் தங்கி விடுகிறது. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நகலூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே நகலூர் பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் தடை மீறி மது விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 570 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கவுந்தப்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 123 மது பாட்டிலுடன் சென்ற கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த வேலு (36), கோபியைச் சேர்ந்த கவுதம் (24), திங்கள் உரைச் சேர்ந்த கார்த்தி (26) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
- இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.
இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.
- பவானி சாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
- பவானி சாகர் அணை தொடர்ந்து இன்று 13-வது நாளாக 102 அடியில் இருந்து வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானி சாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைய தொடங்கியது. பவானி சாகர் அணை தொடர்ந்து இன்று 13-வது நாளாக 102 அடியில் இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3600 கன அடியாக குறைந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- கடந்த வாரம் மருதாச்சலம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி கீழே விழுந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், பாரதி நகர் அருளரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதாச்சலம் (47). இவர் ஈரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு கோகுல பிரியன் என்ற மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக மருதாச்சலத்திற்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் மருதாச்சலம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்துக்கு தையல் போட்டு கொண்டு வீடு திரும்பினார்.
சம்பவத்தன்று தமயந்தி தனது மகன் கோகுல பிரியனுடன் ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மருதாச்சலம் இரவு 7 மணி அளவில் தனது அறைக்குள் சென்றார். அப்போது தமயந்தியும் அவரது மகனும் மருதாச்சலம் தூங்கச் செல்வதாக நினைத்தனர்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து அவர்கள் கதவை திறந்த போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மருதாச்சலம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தமயந்தி மற்றும் அவரது மகன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மருதாச்சலத்தை மீட்டு ஆட்டோ மூலம் காலிங்கராயன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருதாசலத்தை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தமயந்தி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
ஈரோடு:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய- மாநில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட தலைவர் கலை வாசம் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.
- இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
- இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஈரோடு:
சினிமா சண்டை இயக்குனர் கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.
ஆனால் அதையும் மீறி இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காளை மாட்டு சிலை, மரப்பாலம் சோலார் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.






