search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து- 3 ஏக்கர் எரிந்து சேதம்
    X
    கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

    சென்னிமலை அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து- 3 ஏக்கர் எரிந்து சேதம்

    • தீ விபத்தில் குணசேகரனின் இரண்டு ஏக்கர் மற்றும் சிவகுமாரின் ஒரு ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ 1.50 லட்சம் இருக்கும்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வழியாக சென்ற நபர்கள் குடித்துவிட்டு அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் பட்டு தீப்பிடித்தது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் வெள்ளோடு அடுத்துள்ள கருக்கன் காட்டு வலசு கொளத்து தோட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இவரது கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த சிவக்குமார் என்பவர் கரும்புத் தோட்டத்தில் தீ பரவியது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம்பக்கத்து காடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் குணசேகரனின் இரண்டு ஏக்கர் மற்றும் சிவகுமாரின் ஒரு ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ 1.50 லட்சம் இருக்கும்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வழியாக சென்ற நபர்கள் குடித்துவிட்டு அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் பட்டு தீப்பிடித்தது தெரிய வந்தது.

    Next Story
    ×