search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bear attack"

    • படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் வஜ்ரபு கொத்தூர் அருகே உள்ள அனக்காப்பள்ளியில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.

    தற்போது முந்திரி பழ சீசன் என்பதால் முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்கள் பழங்களை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அனக்காப்பள்ளியை சேர்ந்த லோகநாதம் (வயது 47). கூர்மா ராவ் (49), லோகநாதம் மனைவி சாவித்திரி ஆகியோர் நேற்று காலை முந்திரி தோட்டத்தில் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முந்திரி தோட்டத்தில் வந்த கரடி திடீரென பாய்ந்து சாவித்திரையை தாக்கியது. கரடி தாக்குவதை கண்ட லோகநாதம் மனைவியை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது கரடி லோகநாதத்தையும் தாக்கியது. இதில் இருவரும் வலியால் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே இருந்த கூர்மா ராவ் ஓடி வந்து தம்பதியை காப்பாற்ற முயன்றார். அவரையும் கரடி சரமாரியாக தாக்கியது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கரடியை துரத்தினர். அப்போது கரடி முந்திரி தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவர்களை பரிசோதித்த போது லோகநாதம் மற்றும் கூர்மா ராவ் இறந்தது தெரிந்தது.

    இதையடுத்து படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கரடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    • மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் விவசாயி.
    • வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கால்பாச்சேரி, மேல்பா ச்சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளி ட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. மேலும் இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீபகலமா காட்டு பகுதி வழியாக வரும் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கி படுகாயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பவதன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த கரடி ஒன்று இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே வந்து கோவிந்தசாமியை தாக்கியது.

    கால்களில் கடித்ததால் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டதில் கரடி ஊனத்தூர் வனப்பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் நாங்கள் நீண்ட காலமாக காட்டு பகுதி வழியாக செல்கிறோம். அப்போது செல்லும்போது வனவிலங்குகள் எங்களை தாக்கி படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது.
    • இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர்- கேர்மாளம் இடையே உள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (45). வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலத்தில் நேற்று மாலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது. வலியால் அவர் அலறவே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று கரடியை விரட்டினர்.

    பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    வால்பாறையில் கரடி தாக்கி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் மலை 19-வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணன் (61). இவர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வந்தது. இதனை பார்த்ததும் பாலகிருஷ்ணன் தப்பி ஓடினார். அவரை ஒரு கரடி விரட்டி சென்றது. பின்னர் அவரது இடது தோல் பட்டையில் கரடி பலமாக தாக்கியது.

    இதனால் பாலகிருஷ்ணன் அலறினார். இந்த சத்தம் கேட்டு அருகில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் சத்தம் போடவே பாலகிருஷ்ணனை தாக்கிய கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.

    கரடி தாக்கியதில் காயம் அடைந்த பாலகிருஷ்ணனுக்கு முருகாளி எஸ்டேட் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் மானம்பள்ளி வன சரக அலுவலர்கள் விரைந்து வந்து கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    வால்பாறை பகுதியில் அடிக்கடி தொழிலாளர்களை கரடி தாக்கி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.


    ×