என் மலர்tooltip icon

    கடலூர்

    • கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர்ராமமூர்த்தி (வயது 29). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்தசெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா விற்கும்திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்த தால் கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்ஆத்திர மடைந்த சந்தியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்வீடான செம்மங்குப் பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி சந்தியாவை தேடி சந்தியாவின் தங்கை வீடான விருத்தாச்சலத்திற்கு அடுத்த கொம்பாடிகுப்பத்திற்கு சென்று ராமமூர்த்தி சண்டை போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியாவின் தங்கை யுடைய கொழுந்தனார் கொம்பாடிகுப்பம் அருண் குமார் (வயது 24) ராமமூர்த்தியின் கைகளைக் கட்டி போட்டு காரில் செம்மங்குப் பத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்ட ராமமூர்த்தியை அவரது மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியா,மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தியாவின் தங்கையுடைய கொழுந்தனார் கொம்பாடி குப்பம் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையா, ராமச்சந்திரன், திருவரசு, அசோகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து, வேலையின்மைக்கு எதிராக காலி பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை மாற்று இடம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை கடலூர் மாவட்ட முழுவதும் பிரச்சார இயக்கம் தெரு முனை கூட்டம் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியில் ெரயில் மறியல் போராட்டம். மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மணவி ரஞ்சனி (29),இவர்களுக்கு திருமணமாகி 13ஆண்டுகள் ஆகிறது.2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • புருேஷாத்தம்மன் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எம்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகன் புருேஷாத்தம்மன் (வயது 45) இவர் பண்ருட்டி திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புருேஷாத்தம்மன் ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.பின் நேற்று காலை ஒர்க் ஷாப் வந்து பார்த்து போது மர்ம நபர்கள் ஒர்க் ஷாப் கடையின் பூட்டை உடைத்து ஒர்க் ஷாப்பில் இருந்த 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புருேஷாத்தம்மன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றப்பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர், கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் தடயங்கள் சேகரித்தனர்.

    • விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர்.
    • கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது.

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 29- ல் ஓட்டல் நடத்தி வருபவர் கண்ணன். இவரது ஓட்ட லுக்கு காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்பொழுது கடை உரி மையாளர் ஏற்கனவே வாங்கிய பிரியாணிக்கு பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளருக்கும் விக்கி மற்றும் எழில் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதனை யடுத்து எழில் கத்தியுடன் வந்து ஓட்டல் கடை உரிமையாளரான கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர்.

    அப்போது அங்கு வந்த கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது. இதனால் இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்தசி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைர லாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது.
    • குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்கை ஓபன் செய்ய கூடாது.

    கடலூர்:

    திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார். பின்னர் கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். மேலும் புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது. தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல். குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்கை ஓபன் செய்ய கூடாது. உங்களின் செல்போன் எண்ணில் வரும் ரகசிய எண்ணை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்லாமல் இருக்கவும், இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் எனவும், இணையவழி குற்றங்கள் தடுப்பு சம்பந்தமாக உங்களது பெற்றோர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
    • சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

    • தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19-ந்தேதி தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இப்பள்ளி வளாகத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை ஆய்வு செய்தார். முகாமிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்புத்துறை உதவி உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்தார். மேலும். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் தனியார் நிறுவனங்கள் அமைக்க வேண்டிய அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    இந்த ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்யராஜ், தாசில்தார் அந்தோணிசாமி, நகராட்சி கமிஷனர் பானுமதி, நகரமன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிச் செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், பயிற்சி மாணவர்களும் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 37 பேரை நுழைவு வாயிலில் இருந்து ஏற்றிக்கொண்டு 2-வது சுரங்கத்திற்கு பிக்அப் வாகனம் புறப்பட்டது. சுரங்கத்தின் அருேக செல்லும் போது வாகனத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

    அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களான கந்தவேல் (வயது 47), கலியமூர்த்தி (40), பயிற்சி மாணவர் கீர்த்திவாசன் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.எல்.சி.க்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இதற்கு வாகனப்பழுது காரணமாக கூறப்படுகிறது. எனவே, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சரி செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

    கடலூர்:

    பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

    • ஆடி அமாவாசை தினமான அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவிலாகும். இந்த கோவிலில் சமய குறவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் தடுத்தாட்கொண்ட தலமாகும். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த தலத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேர்ந்திசையில் திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஓதுவா மூர்த்திகளை மேளதாளம், நாதஸ்வரம், கைலாய வாத்தியம் முழங்க இந்து ஆன்மீக பேரவை மற்றும் சிவனடியார்கள் கூட்டத்தினர் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகத்தினர், ஒதுவாமூர்த்தி கள் நல சங்கத்தினர், இந்து ஆன்மீக அறக்கட்டளையினர் மற்றும் ஆலய ஓதுவா மூர்த்தி ராஜ்குமார் சிவனடியார்கள், சிவதொண்ட ர்கள் செய்தனர்.

    ×