என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்ட் கட்டை"

    • ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர்.
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்?

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். இன்று காலை அனைத்து கொடிக்கம்பங்களையும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு, சிமெண்ட் கட்டைகளும் இடிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், பா.ம.க. மாநில நிர்வாகி கோபிநாத், த.வா.க. கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி விரைந்து வந்து அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×