search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது
    X

    விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது

    • விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர், காவனூர், வல்லியம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை மஞ்சள் நோய் தாக்கியதால், கரும்பு வளர்ச்சி அடையாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு முற்றிலும் அழிவதற்குள், தங்களது கரும்புகளை வெட்டி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் இருந்து இறக்க கூடாது என்று கூறி விவசாயிகளை தடுத்தனர். இதனால் கரும்புகள் கடந்த 3 நாட்களாக வெயிலால் வாகனங்களில் இருந்தே காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர், கரும்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து, அலுவலகத்தின் முன்பக்க, பின்பக்க உள்ள கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்தின் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர். இந்நிலையில் இன்று காலை விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து பூட்டிய விவசாயிகளான ராஜ வன்னியன் (வயது 47), செல்வ வளவன் (37), ராஜீவ் காந்தி (47) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×