என் மலர்
கடலூர்
ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
நெல்லிக்குப்பம்:
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம் செய்து கொண்டது பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
அதேபோல் ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 22). திருநங்கையான இவருக்கு, முகநூல் (பேஸ்புக்) மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.
மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லட்சுமணன், திருநங்கை அமிர்தாவை காதலிப்பது பற்றி பெற்றோருக்கு தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.

இதுகுறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்சி. வரை படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால் நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.
இதுகுறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில், நாங்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். முதலில் எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, அமிர்தாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்துகொண்டேன் என்றார்.

இந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை திருநங்கை அமிர்தாவும், லட்சுமணனும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்சி. வரை படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால் நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.
இதுகுறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில், நாங்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். முதலில் எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, அமிர்தாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்துகொண்டேன் என்றார்.
வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்:
வடகிழக்கு வங்க கடலில் மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து புயலாக மாறி இந்த 2 மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதேபோல் காரைக்கால் பகுதியிலும் நேற்று மாலை திடீரென்று காற்று வீச தொடங்கியது. கருமேகங்கள் திரண்டு வந்தன. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் எந்தவித அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின் பேரில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெய்வேலி அருகே குடிபோதையில் ரகளை செய்த மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் அருகே உள்ளது பெரியகாப்பாங்குளம். இந்த பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). இவரது 2-வது மகன் சிவக்குமார் (37) கூலித்தொழிலாளி.
இவருக்கு சீத்தா (29) என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து வந்தார்.
இதனால் சிவக்குமாருக்கும், சீத்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கணவன் தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்வதால் சீத்தா மனவேதனை அடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனிடம் தகராறு செய்துவிட்டு சீத்தா தனது குழந்தைகளுடன் கச்சிராயநத்தத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சிவக்குமார் நேற்று மாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவி சீத்தாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சீத்தா மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த சிவக்குமார் மதுகுடித்துவிட்டு பெரிய காப்பாங்குளத்தில் உள்ள தனது தந்தை பரமசிவம் வீட்டிற்கு வந்தார்.
அங்கிருந்த தனது தாய் மாலாவிடம் குடிபோதையில் தகராறு செய்தார். இதை அறிந்ததும் ஏன் குடித்துவிட்டு ரகளை செய்கிறாய் ? என்று மகனிடம் பரமசிவம் தட்டிக்கேட்டார். இதில் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த பரமசிவம் மகனை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் தலை கல்லில் பட்டு பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தெர்மல் போலீசில் புகார்செய்யப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனை அடித்து கொன்ற பரமசிவத்தை கைது செய்தனர்.

கடலூர் அருகே இன்று காலை செப்டிக் டேங்க் கட்டும் பணியின்போது 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அந்த பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.
இதையொட்டி வீட்டு பகுதியில் செப்டிக் டேங்க் கட்டும் பணி நடந்து வந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டு மேல்பகுதி மூடப்பட்டிருந்தது.
செப்டிக் டேங்கின் முன்பகுதி சிறிய சாக்கு போட்டு அடைக்கப்பட்டிருந்தது. செப்டிக் டேங்கில் உள்பகுதியில் சிமெண்ட் பூசுவதற்காக இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள கா.குப்பத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 49), சித்தேரிக்கரையை சேர்ந்த ராஜ்குமார்(40) உள்பட 4 கட்டிட தொழிலாளர்கள் வந்தனர்.
செப்டிக் டேங்கின் முன்பகுதியில் மூடப்பட்டி ருந்த அந்த சாக்கினை அகற்றிவிட்டு முதலில் செப்டிக் டேங்கிற்குள் மாணிக்கம் இறங்கினார். நீண்ட நேரம் ஆகியும் அவரிடம் இருந்த எந்தவித சத்தமும் வரவில்லை. அதன்பின்னர் ராஜ்குமார் உள்ளே இறங்கினார். 1 மணிநேரம் ஆகியும் அவரிடமும் எந்தவித சத்தமும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் 2 பேரின் பெயர்களை கூப்பிட்டு அழைத்தனர்.
ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. உடனே சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கவசத்துடன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கினர்.
அங்கு மாணிக்கம், ராஜ்குமார் ஆகியோர் பிணமாக கிடந்தனர். செப்டிக் டேங்க் மூடப்பட்டிருந்ததால் அது காற்று புகாத பகுதியாக இருந்தது. எனவே அதனுள் இறங்கிய மாணிக்கம், ராஜ்குமாரும் மூச்சுதிணறி இறந்திருப்பது தெரியவந்தது.
அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மேலே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேரும். பின்னர் வடவாறு வீராணம் ஏரியை வந்து சேரும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையின் காரணமாக 2 முறை வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 40 அடியாக இருந்தது. சென்னைக்கு குடிநீருக்காக 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் 38 அடி வரை நீர் இருந்தால்தான் சென்னை குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீரை அனுப்ப முடியும். அதன் பின்னர் தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும்.
அதன்படி பார்த்தால் இன்னும் 10 நாட்களுக்குதான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக வீராணம் ஏரிக்கு பருவமழை பெய்யும் போதும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் இந்த ஏரி நிரம்பி வரும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 17 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் 25 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றனர்.
எனவே மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பிரச்சனை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா? என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மந்தாரக்குப்பம்:
தற்கொலை செய்துகொள்பவர்கள், ஊரை விட்டு ஓடுபவர்கள் தங்களது முடிவுக்கான காரணங்கள் குறித்து கடிதங்கள் எழுதி வைத்து செல்வதை தான் நாம் இதுநாள் வரைக்கும் அறிந்து இருப்போம். இந்த கடிதங்களும் போலீசாரின் விசாரணைக்கு மிகவும் கைகொடுக்கும். அந்த வரிசையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கொள்ளையன் ஒருவன், தான் கொள்ளையடிக்க சென்ற கடையின் உரிமையாளருக்கே கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறான்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மேலும் அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையை பார்வையிட்டனர்.
அப்போது கடையில் உள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
“உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா, அதுக்கு தான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம் நேற்று முன்தினம் இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ் கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லாபெட்டியில் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இது கொள்ளையனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தான் வெறும் கையோடு திரும்புவதை நினைத்து விரக்தியின் உச்சத்திற்கே சென்ற கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான். இந்த நிலையில் கொள்ளையன் கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கரை அங்கேயே போட்டு சென்று இருந்தான். அதில் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால் அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையடிக்க வந்த நபர், கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் மெயின்ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டிருந்தது.

மேலும் அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையை பார்வையிட்டனர்.
அப்போது கடையில் உள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
“உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா, அதுக்கு தான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம் நேற்று முன்தினம் இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ் கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லாபெட்டியில் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இது கொள்ளையனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தான் வெறும் கையோடு திரும்புவதை நினைத்து விரக்தியின் உச்சத்திற்கே சென்ற கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான். இந்த நிலையில் கொள்ளையன் கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கரை அங்கேயே போட்டு சென்று இருந்தான். அதில் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால் அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையடிக்க வந்த நபர், கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் முதுநகர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் அருகே உள்ள ஜி.என்.குப்பம் ராணிகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி(வயது 17). பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது அவரது உடலில் இருந்த காயங்களை பார்த்த, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அங்கிருந்த சிலர், மரத்தில் தூக்கில் தொங்கியதால் அதில் உரசியதில் உடலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறினர். இதை நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதி தற்கொலைதான் செய்து உள்ளார் என்று நினைத்து உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் குடிபோதையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம் உன் அக்காவை கொலை செய்ததுபோல் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். இதனால் ஆறுமுகத்திற்கு தனது மகள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடலூர் சப்-கலெக்டர் சரயூவிடம் அவர் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் முதுநகர் போலீசாருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராணி காலனி பகுதி சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த வெண்மதியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் வெண்மதியின் உடலை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து டாக்டர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இளம் பெண்ணின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அங்கு அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் ராணிகாலனியை சேர்ந்த குப்புசாமி மகன்கள் பிரசாந்த் என்கிற சின்னவன், விஜயகாந்த், விவேகானந்தன், ராஜா மகன் இளையராஜா ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரசாந்த் வெண்மதியின் உறவினர் ஆவார். இதனால் அவரை பிரசாந்த் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதனடிப்படையில் வெண்மதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், வெண்மதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதன் அறிக்கை வந்தபின்னர் தான் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த விவரம் தெரியவரும். மேலும் இது தொடர்பாக 4 பேரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விலகும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் கடலூர் முதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருத்தாசலம் அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆலடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் மணல் கடத்துவதாக கூறி அவரை போலீசார் பிடிப்பதற்காக துரத்தினர். ஆனால் நீலகண்டன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
அப்போது அப்பகுதியில் இருந்த முட்புதர்களில் விழுந்து நீலகண்டன் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அங்குள்ள விருத்தாசலம்-சேந்தநாடு சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், ஆலடி போலீசாரை கண்டித்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பாவி மக்கள் மீது போலீசார், பொய் வழக்குபதிவு செய்வதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
விருத்தாசலம்- சேந்த நாடு சாலையில் ஆலடி போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக ஆலடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் மணல் கடத்துவதாக கூறி அவரை போலீசார் பிடிப்பதற்காக துரத்தினர். ஆனால் நீலகண்டன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
அப்போது அப்பகுதியில் இருந்த முட்புதர்களில் விழுந்தார். அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விருத்தாசலம்- சேந்த நாடு சாலையில் திரண்டனர். அவர்கள் ஆலடி போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த ஆலடி போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அப்பாவி இளைஞர்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சமாதானத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுருக்கு வலைகளை கொண்டு மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் மீன் விற்பனை செய்வது வழக்கம்.
இங்கு சுருக்கு வலையில் பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 32 மீனவ கிராமத்தினர், விசைப்படகு உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் எம்.ஜி.ஆர். திட்டு மீனவர்கள் கடந்த சில நாட்களாக சுருக்கு வலையில் மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எம்.ஜி.ஆர்.திட்டு மீனவர்கள் தொடர்ந்து சுருக்குவலை மூலம் மீன்பிடித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 32 மீனவ கிராமத்தினர் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரத்தில் போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடற்கரை ஓரம் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி படகுகள் நின்று கொண்டிருந்தன. அதில் சுருக்கு வலைகள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சில மீனவர்கள் படகுகளுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு விசைப்படகு உள்பட 4 படகுகள் தீ பிடித்து எரிந்தன. மேலும் படகில் இருந்த வலைகள், என்ஜின்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வெள்ளாற்று முகத்துவாரத்துக்கு வர முயன்றனர். இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றார். அங்கு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அன்னங்கோவில் உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து எம்.ஜி.ஆர்.திட்டு கிராமத்தை சேர்ந்த படகுகளின் உரிமையாளர் குமார் கிள்ளை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் படகுகளுக்கு தீ வைத்து எரித்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் புதுப்பேட்டையை சேர்ந்த குழந்தைவேலு(41), புதுக்குப்பம் ராஜூ(58), சின்னூர் தியாகு(33), சிவா(34), செல்வம்(40), புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார்(48), வீரமணி(51), பக்கிரிசாமி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீ வைத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பரங்கிப்பேட்டை பகுதியில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீனவர்களிடையே பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்காரணமாக இன்று கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் 32 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் மீன் விற்பனை செய்வது வழக்கம்.
இங்கு சுருக்கு வலையில் பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 32 மீனவ கிராமத்தினர், விசைப்படகு உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் எம்.ஜி.ஆர். திட்டு மீனவர்கள் கடந்த சில நாட்களாக சுருக்கு வலையில் மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எம்.ஜி.ஆர்.திட்டு மீனவர்கள் தொடர்ந்து சுருக்குவலை மூலம் மீன்பிடித்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த 32 மீனவ கிராமத்தினர் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரத்தில் போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடற்கரை ஓரம் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி படகுகள் நின்று கொண்டிருந்தன. அதில் சுருக்கு வலைகள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சில மீனவர்கள் படகுகளுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு விசைப்படகு உள்பட 4 படகுகள் தீ பிடித்து எரிந்தன. மேலும் படகில் இருந்த வலைகள், என்ஜின்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வெள்ளாற்று முகத்துவாரத்துக்கு வர முயன்றனர். இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றார். அங்கு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

அதன்பேரில் படகுகளுக்கு தீ வைத்து எரித்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் புதுப்பேட்டையை சேர்ந்த குழந்தைவேலு(41), புதுக்குப்பம் ராஜூ(58), சின்னூர் தியாகு(33), சிவா(34), செல்வம்(40), புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார்(48), வீரமணி(51), பக்கிரிசாமி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீ வைத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பரங்கிப்பேட்டை பகுதியில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீனவர்களிடையே பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்காரணமாக இன்று கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் 32 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
சிதம்பரம் அருகே ஒரு பெரிய பைபர் படகும், 3 சிறிய பைபர் படகுகளும் தீயில் எரிந்தன. படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சின்ன வாய்க்கால், அன்னங்கோயில், முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு உள்பட 28-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மீனவர்களில் சிலர் சுருக்கு வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்கக்கோரியும், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை அன்னங்கோயில் மீன் மார்க்கெட்டில் வாங்க கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் கடற்கரையோரம் தங்களது படகுகளை வரிசையாக நிறுத்தி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்கு வலைகளை கொண்டு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இதையறிந்த போராட்டக்காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் படகில் நடுக்கடலுக்குள் சென்றனர். அங்கு நின்ற படகில் சுருக்கு வலை இருப்பதை பார்த்தனர். உடனே அதற்கு தீ வைத்தனர். சுருக்கு வலையில் பிடித்த தீ பரவி படகுகளிலும் பிடித்தது.
இதில் ஒரு பெரிய பைபர் படகும், 3 சிறிய பைபர் படகுகளும் தீயில் எரிந்தன. படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு இருதரப்பை சேர்ந்த மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையொட்டி மீனவ கிராமங்களில் அசம்பாவித சம்பங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.