search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தீவிர ரோந்து"

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
    • 5 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    திருப்பூர் : 

    விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனை, இந்து முன்னேற்றக் கழகம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.

    அதன்படி, நடப்பாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பூா் மாநகா் மட்டுமின்றி அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், வெள்ளக்கோவில், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    திருப்பூா் மாநகரில் இந்து முன்னணி சாா்பில் 1,000 சிலைகளும் மற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 500 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதே போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3,500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபுநபு தலைமையில் 2 உதவி ஆணையா்கள், 6 துணை ஆணையா்கள் தலைமையில் 900 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் தலைமையில் 5 டிஎஸ்பி.,க்கள் தலைமையில் 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை சாா்பில் வாகனச்சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

    ×