search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
    X
    காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

    கடலூர் - காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது.
    கடலூர்:

    வடகிழக்கு வங்க கடலில் மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து புயலாக மாறி இந்த 2 மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அதேபோல் காரைக்கால் பகுதியிலும் நேற்று மாலை திடீரென்று காற்று வீச தொடங்கியது. கருமேகங்கள் திரண்டு வந்தன. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×