என் மலர்
செய்திகள்

வீராணம் ஏரி
மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
வீராணம் ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேரும். பின்னர் வடவாறு வீராணம் ஏரியை வந்து சேரும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையின் காரணமாக 2 முறை வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 40 அடியாக இருந்தது. சென்னைக்கு குடிநீருக்காக 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் 38 அடி வரை நீர் இருந்தால்தான் சென்னை குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீரை அனுப்ப முடியும். அதன் பின்னர் தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும்.
அதன்படி பார்த்தால் இன்னும் 10 நாட்களுக்குதான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக வீராணம் ஏரிக்கு பருவமழை பெய்யும் போதும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் இந்த ஏரி நிரம்பி வரும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 17 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் 25 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றனர்.
எனவே மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பிரச்சனை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Next Story