என் மலர்
கடலூர்
- கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
- இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 41). இவர் கடலூர் அடுத்த பெரிய காரைக்காடு பகுதியில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அரிதாசிடம் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் அரிதாஸ் வைத்திருந்த ரூ.600 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு, அரிதாசினை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில் கடலூர் முதுநகர் மணிகூண்டு அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் அரிதாசை தாக்கி பணம் பறித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து புதுவை மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறியில் தொடர்புடைய மேலும் 3 வாலிபர்களை கடலூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
- இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.
அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- திண்டி வனம் நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
- லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர்
கடலூர்:
கடலூர் அடுத்த செம்மங்குப் பத்தில் உள்ள அரசு அரிசி ஆலையில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திண்டி வனம் நுகர் பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
இந்த லாரி அண்ணா கிராமம் சாலையில் சென்று கொண்டி ருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர். சாலை யின் நடுவே போக்கு வரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி னர்.
- மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
- இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது.
கடலூர்:
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கடலூரின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குண்டு உப்பலவாடியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடியது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் இருந்து தண்ணீர் வருவதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட வால்வை மூடி தண்ணீர் வருவதை நிறுத்தினர். இதனால் கடலூரில் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது.
- இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரி ஊழியர் லாரி மோதியதில்பலத்த காய மடைந்து சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தை சேர்ந்த வர் மாணி க்கம் (48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு முண்டியம்பாக்கம் ஒரத்தூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரவு 1 மணி அளவில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். இது தொடர்பாக கொடுத்தபுகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
- வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு வகுப்பு இடைவேளை விடப்ப ட்டது. அப்போது மாணவிகள் வெளியில் அமர்ந்து பேசிக்கொ ண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் பின்புறம் அடித்துள்ளார். இதில் அந்த மாணவியின் கையில் பலத்த அடிபட்டது. வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மாணவியை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் வேப்பூர் போலீ சாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா உத்தரவிட்டார். அதன்படி வேப்பூர் போலீசார் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு சென்று மாணவி யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கவர்னர் மீது கண்டன கணைகளை வீசி வருகின்றன.
- எடப்பாடி பழனிசாமி கழுவும் மீனில் நழுவும் மீனை போல் இதெல்லாம் புராணம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது என்று நழுவி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் எழுப்பப்படும் சித்தாந்த மோதல்களுக்குள் சிக்கி அரசியல் கட்சிகள் படாதபாடு படுகின்றன.
ஆரியமாம்....! திராவிடமாம்...! யார் சொன்னது? அப்படி எதுவும் கிடையாது. இது ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பிரிவினை. பள்ளிப் படிப்பை பாதியிலே முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த கால்டுவெல் உருவாக்கிய கருத்தாக்கம் இது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கொளுத்தி போட்டது பற்றிக்கொண்டது என்பது மட்டுமல்ல. அது பற்றிய விவாதங்களையும் பொதுத்தளத்தில் ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கவர்னர் மீது கண்டன கணைகளை வீசி வருகின்றன. பா.ஜனதாவுடன் முறைத்துக் கொண்ட அ.தி.மு.க. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எதிர்கால அரசியல் சதுரங்கம் எப்படி அமையும்? என்ற எண்ணத்தால் எடப்பாடி பழனிசாமி கழுவும் மீனில் நழுவும் மீனை போல் இதெல்லாம் புராணம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது என்று நழுவி இருக்கிறார்.
அவர் இப்படி கவர்னருக்கு எதிராக கருத்து சொல்லாததை தி.மு.க. கெட்டியாக பிடித்துக்கொண்டது. ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி முறிவு நாடகம் என்று விமர்சித்து வரும் நிலையில் சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை தி.மு.க. போட்டு வரும் ஸ்கெட்சில் எடப்பாடி பழனிசாமி சிக்கி வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மக்கள் என்ன கருதுகிறார்களோ?
- போலீசார் காரில் வந்தவரிடம் வெள்ளி பொருட்களுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.
- வெள்ளி நகைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் வெள்ளி கொலுசு, மோதிரம், விளக்கு உள்ளிட்ட 4 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் காரில் வந்தவரிடம் அதற்குரிய ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.
இதனைதொடர்ந்து அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி (52) என்பதும், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் அந்த வெள்ளி நகைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
- இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் துறைமுகம் போலீஸ் சப் -இன்ஸ்பெ க்டர் தனபால் தலை மையில் ஏட்டு நெப்போலியன், தனிப்பிரிவு சிவஞானம் ஆகியோர் இன்று காலை பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை முழுமையாக சோதனை செய்தனர் அப்போது ஆட்டோவின் பின்புறம் தகடு இருந்தது.
அதனை அகற்றி பார்த்த பெட்டி போல் அமைக்கப்பட்டு அதில் சாராய பாக்கெட் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் புதுவண்டிப்பாளையம் சேர்ந்த பாவாடைராயன் (36) , சரத்குமார் (31) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு சாராயத்தை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவிற்குள் சிறிய பெட்டி போல் செய்து அதன் மேல் தகடு அமைத்து நூதன முறையில் சாராயம் கடத்தி சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
பண்ருட்டி அருகேயுள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இன்று முகூர்த்த தினம் என்பதால் இவருக்கு திருமண ஆர்டர் கிடைத்தது. இதற்காக நேற்று மாலையில், கடையை பூட்டிவிட்டு ஊழியர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் ஸ்டூடியோவிற்கு அருகில் உள்ள கடைக்காரர்கள் இன்று காலையில் அவர்களது கடையை திறக்க வந்தனர். அப்போது பாலமுருக னின்விஸ்டூடியோன் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாலமுருகனும், போலீசாரும் விரைந்து வந்தனர்.ஸ்டூடியோவிற்குள் சென்று பார்த்த போது, உயர்ரக டிஜிட்டல் கேமிரா, டிரோன் கேமிரா, லேப்டாப், சேமிப்பு உண்டியல் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் வந்து போது, கண்ணனை மர்ம நபர்கள் கல்லால் அடித்தனர்.
- அவர்கள் கண்ணனை நோட்டமிட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.
கடலூர்:
நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். நெய்வேலி சூப்பர் பஜாரில் கண்ணன் பிரியாணி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வ்ந்து கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் வந்து போது, கண்ணனை மர்ம நபர்கள் கல்லால் அடித்தனர். உடனே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அங்கு திடீரென வந்த மர்மகும்பல் கண்ணனை சரமாரியாக கத்தியால் வெட்டி அவரது முகத்தை சிதைத்தது. இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணனின் ஓட்டலுக்கு வந்து பிரியாணியை கடனாக கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஓட்டல் உரிமையாளரான கண்ணனை அந்த நபர்கள் கத்தியால் வெட்டினர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சியை வைத்து 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளதும், அவர்கள் கண்ணனை நோட்டமிட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஜாமீனில் வந்த 2 பேரை போலீசார் தேடினர். அவர்கள் தலைமறைவான விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களுடன் சுற்றித் திரிந்த காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகியுள்ள நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நெய்வேலி பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடு கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.பயனாளி தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் தற்போது தகுதியற்ற சில பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 160 வீடுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் எனக் கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 25 பெண்கள் உட்பட 40 பேர் இன்று காலையில் திரண்டு வந்தனர்.அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ரேஷன் அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க போவதாக கூறினார்கள். அங்கு பணியில் இருந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.






