என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.
இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் உலக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தி.மு.க. மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் பால. கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. இதில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் தற்போது புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களில் நான் மேற்கொண்ட பரிசோதனையில் கணிச மாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இடையே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 4 வகையான புற்றுநோய் உள்ளன.இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
ஆகையால் பெண்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோய் உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது கட்டிகள் உருவாகி நீண்ட நாட்கள் இருந்தால் அதனை அலட்சியமாக விடுபடாமல் உடனடியாக கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி புற்று நோய்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் அதிகளவில் பதிவுகள் செய்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.
இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பீரோ உடைத்து, ரகசிய அறையில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் பணம் கொள்ளைபோயிருந்தது.
- கைரேகை நிபுணர்கள் வீட்டின் மதில்சுவர், கதவு, பீரோ போன்றவற்றில் இருந்த தடயங்களையும், கைரேகைளையும் சேகரித்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருள்ஜோதி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில் எதிரில் வசிப்பவர் முருகன் (வயது 55). இவர் பண்ருட்டி கூட்டுறவு வங்கியில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (47). இவர் செவிலியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.
இவர்களது மகன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். அவரை காண முருகன், சுலோச்சனா தம்பதியினர் வீட்டினை பூட்டிவிட்டு கடந்த 21-ந் தேதி கோயம்புத்தூருக்கு சென்றனர். நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் மதில் சுவர் கேட்டை திறந்து போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோ உடைத்து, ரகசிய அறையில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் பணம் கொள்ளைபோயிருந்தது.
இது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கடலூரில் இருந்து மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். வீட்டிற்குள் வலம் வந்த மோப்ப நாய், வெளியில் வந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தொடர்ந்து அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டின் மதில்சுவர், கதவு, பீரோ போன்றவற்றில் இருந்த தடயங்களையும், கைரேகைளையும் சேகரித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை பண்ருட்டி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படுமென போலீசார் கூறினார்கள்.
கூட்டறவு வங்கி ஊழியர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பாதிரிப்புலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசாருக்கு கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீ சார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வாலி பர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் கே.என். பேட்டை யை சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாஜி கணேசனை கைது செய்தனர்.
- பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
- வைத்தியநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன்(28), திருமணமானவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ்கா ரர்கள் வைத்திய நாதன் மற்றும் சுரேஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்ப டை போலீசார் கன்னியா குமரி, நாகர் கோவில், திரு வண்ணா மலை ஆகிய இடங்களில் தேடி மணி கண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீ சாரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பாராட்டினார்.
- கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கடலூர்:
நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவர் நெய்வேலி சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் கண்ணனை சுற்றிவளைத்து சராமரியாக கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர். இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கடலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.
- பண்ருட்டியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது.
கடலூர்:
சென்னையில் இந்திய கம்யூ. கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூ. சார்பில் சாலை மறியல் நடந்தது. இது பற்றிய தகவலறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் தலைமை யிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் துரை உள்ளிட்ட 29 பேரை கைது செய்தனர்.
- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கடலூர்:
இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 29, 30 ஆகிய நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 31 மற்றும் நவ.1-ந் தேதிகளில் சில இடங்களிலும், நவ. 2, 3-ந் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புவனகிரி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், தொழுதூர், வானமாதேவி, புவனகிரி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ந்தது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த திடீர் மழை காரணமாக ஆங்காங்கே வேளாண்மை பணிகள் பாதிப்படைந்தது. மேலும் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வனமாதேவி - 14,தொழுதூர் - 8, சிதம்பரம் -7.9,பரங்கிப்பேட்டை -5.4 , அண்ணாமலை நகர் -5,புவனகிரி - 3,பண்ருட்டி -2,லால்பேட்டை -2,கடலூர் கலெக்டர் அலுவலகம் - 0.4 என மொத்தம் 47.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
- கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
- கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.
அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.
- தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
- விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த பூதாமூரில் போதைப்பொ ருட்கள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நம்ம தெரு நிகழ்ச்சி இன்று காலையில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நம்ம தெரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களினால் ஏற்படும் தீங்கு குறித்தும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விருத்தாசலம் பூதாமூரில் நம்ம ஸ்டிரீட் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் வரவேற்புரையாற்றினார்.
இதில் அமைச்சர் சி.வே.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்ம தெரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விருத்தாலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பெண் தலைமை காவலர் பவானி ஆகியோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
- 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த சின்ன கங்கனாங்குப்பம் பாண்டி சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோ கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை,போலீஸ்காரர்கள் முருகா னந்தம், ராஜா, பெண் தலைமை காவலர் பவானி ஆகி யோர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் சாக்கு முட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீ சார் சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. பின்னர் வாகன டிரைவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். அவர் கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. மேலும் 600 கிலோ அரிசி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து குடோ னில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.






