search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்புபெண்கள் -பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்டாக்டர் பால.கலைக்கோவன் அறிவுரை
    X

    கடலூரில் தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால.கலைக்கோவன் பேசிய போது எடுத்த படம்.

    நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்புபெண்கள் -பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்டாக்டர் பால.கலைக்கோவன் அறிவுரை

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூரில் உலக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தி.மு.க. மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் பால. கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. இதில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் தற்போது புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களில் நான் மேற்கொண்ட பரிசோதனையில் கணிச மாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இடையே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 4 வகையான புற்றுநோய் உள்ளன.இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆகையால் பெண்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோய் உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது கட்டிகள் உருவாகி நீண்ட நாட்கள் இருந்தால் அதனை அலட்சியமாக விடுபடாமல் உடனடியாக கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி புற்று நோய்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் அதிகளவில் பதிவுகள் செய்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×