search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூர் அருகேபரவனாற்று பாலத்தில் பழுதாகி நின்ற டிரெய்லர் லாரிபோக்குவரத்து கடும் பாதிப்பு
    X

    பரவனாற்று பாலத்தில் நின்று போன டிரெய்லர் லாரியை படத்தில் காணலாம்.

    வடலூர் அருகேபரவனாற்று பாலத்தில் பழுதாகி நின்ற டிரெய்லர் லாரிபோக்குவரத்து கடும் பாதிப்பு

    பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.

    இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×