என் மலர்tooltip icon

    கடலூர்

    • கொலை வழக்கில் தொடர்புடைய பாம் ரவி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
    • சம்பவத்தில் தொடர்புடைய எழில்நிலவன் சமீபத்தில் ஜாமினில் வெளியான நிலையில் விக்கி சிறையிலேயே உள்ளார்.

    கடலூர்:

    நெய்வேலியில் பிரியாணி கடையை நடத்தி வந்தவர் கண்ணன்.

    கடந்த 26-ந்தேதி இரவு நெய்வேலியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்கு வந்த 2 பேர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்ததுடன், கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவிய நிலையில் போலீசார் விக்கி மற்றும் எழில்நிலவன் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசாரிடம் கொடுத்ததால், மேலும் ஆத்திரமடைந்த விக்கி, கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எழில்நிலவன் சமீபத்தில் ஜாமினில் வெளியான நிலையில் விக்கி சிறையிலேயே உள்ளார். விக்கி சிறையில் இருந்தபடி கண்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதற்காக எழில் நிலவன் மூலமாக புதுச்சேரியில் உள்ள கூலிப்படை தலைவன் பாம் ரவி மூலம் இந்த கொலை நடைபெற்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாம் ரவி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் எழில் நிலவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம், புதுச்சேரி போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பாம் ரவி நெய்வேலி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் பாம் ரவியை பிடிப்பதற்கு அந்த பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்ற பாம் ரவியை போலீசார் பிடித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருந்த இடத்தை காட்ட பாம் ரவியை அழைத்துச் சென்றனர். அங்கிருந்தும் தப்பி ஓட முயன்று சுவர் ஏறி குதித்த பாம் ரவி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரசாந்தை போலீசார் பிடிப்பதற்கு சென்றனர். அவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது அவருடைய காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு பாம் ரவி மற்றும் பிரசாந்துக்கு காலில் கட்டு போட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

    இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சுபாசும் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.6,51,000 செலவில் சமை யலுக்கு தேவைப்படும் பாத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளது.
    • 21,659 மாணவர்களுக்கு ரூ.17,16,92,820 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 17 ேபர்களுக்கு ரூ. 51 லட்சம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. ஆதி திரா விடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 61 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ.6,51,000 செலவில் சமை யலுக்கு தேவைப்படும் பாத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளது. அழிவின் விளிம்பி லுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடி யின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 செலவில் இலவச கறவை மாடுகள் வழங்கப் பட்டுள்ளது. தீண்டா மை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்து டன் வாழும் கிராமத்தினை தேர்ந்தெடுத்தல் திட்டத்தின் கீழ் கடலூர் வட்டம், புதுக்கடை ஊராட்சியும் மேல்புவனகிரி, அம்மன் குப்பம் ஊராட்சியும் சிறந்த கிராமமாக தேர்ந்தெ டுக்கப் பட்டு ரூ.20 லட்சம் பரிசளிக் கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மனித நேய வாரவிழா நடை பெற்று வருகிறது.

    தீண்டாமை கடைபிடிக் காத மற்றும் சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கடலூர் வட்டம் வரக்கால்பட்டு ஊராட்சிக்கு ரூபாய் 10 லட்சம் கிராம வளர்ச்சி பணிகளை மேற்கொள் வதற்கு ஊக்கத் தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களில், பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களில் 18 ேபர்களுக்கு ரூ.3,52,000 செல வில் ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு ரூ. 9 லட்சம் செலவில் இலவச பவர் டிரில்லர் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 இளைஞர்களுக்கு ரூ.1,50,000 செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப் பட்டுள்ளது. ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த தையற்பயிற்சி பெற்ற 55 ேபர்களுக்கு இலவச தையல் எந்திரமும், 13 ேபர்க ளுக்கு சலவைப் பெட்டியும் வழங்கப் பட்டுள்ளது. வன்கொடு மையால் பாதிக்கப் பட்ட ஆதி திராவிடர் , பழங்குடி யின 477 குடும்பங்க ளுக்கு ரூ. 4,74,38,650 செலவில் தீருதவித் தொகையும், 16 ேபர்களுக்கு ரூ. 91,33,348 செலவில் ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு உயிரிழந்த 14 ேபர்களின் வாரிசுதாரர் களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசுப் பணி (இளநிலை உதவி யாளர், அலுவலக உதவி யாளர், இரவு காவலர், சமையலர்) வழங்கப் பட்டுள்ளது.

    பீரிமேட்ரிக் ஸ்காலர்ஷிப் – 319 பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 19,268 மாண வர்களுக்கு ரூ.5,71,53,600 உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. போஸ்ட் மேட்ரிக் 217 பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 18,170 மாணவர்க ளுக்கு ரூ. 4,46,71,073 உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. 148 கல்லூரிகளில் பயிலும் 21,659 மாண வர்களுக்கு ரூ.17,16,92,820 உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது. பெண்கல்வி ஊக்கு விப்புத்தொகை 3 முதல் 5 -ம் வகுப்பு பயிலும் 23,911 மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1,19,53,000 கல்வி உதவித்தொகை யும், 6 -ம் வகுப்பு பயிலும் 8,665 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.86,65,000 கல்வி உதவித்தொகை யும், 7 முதல் 8 -ம் வகுப்பு பயிலும் 18,317 மாணவி களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.2,74,75,500 வழங்கப் பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்க ளாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 -ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளி களில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணவர்களுக்கு ரூ.13,67,325 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார்களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் பகுதியில் கடந்த சில வருடங்களில் தேர்தல் முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக2 கொலைகள் நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையி ல்கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.
    • ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,08,000 மதிப்பீட்டிலும் மற்றும் மாற்றுத்திறனாளியின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் பல்வேறு வட்டங்களை சார்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள புகழ் பெற்ற குருநமச்சிவாயர் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்மநாதர், யோகாம்பாள், குருநமச்சிவாயர், மாணிக்க வாசகர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த மட வளாகத்தில் கோவில் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்து 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 8 வீடுகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகளை காலி செய்ய இந்து அறநிலையத் துறையினர் வருவாய் துறை மூலம் கடந்த ஜூலை மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும், வீடுகளில் வசிப்பவர்கள் 3 மாதத்திற்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதனை ஒரு சிலர் பெற மறுத்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவுகளில் அதிகாரிகள் நோட்டீசினை ஒட்டினர். இந்நிலையில் இந்த 14 வீடுகளை அப்புறப்படுத்த இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் தாசில்தார் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் இன்று காலை வந்தனர். இவர்களுடன் வருவாய்த் துறை ஊழியர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், வீடுகளை அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

    அங்கிருந்த வீடுகளில் வசித்தவர்கள் இதனை கண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி னர். இதையடுத்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தி னர்.

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி(30) செங்கல் சூளைதொழிலாளி.திருமணமானவர்.இவ ருக்கு மனைவி, 2மகள்கள் உள்ள னர். முரளிக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு.

    இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு 8 மணிக்கு விஷம்குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக முரளியை முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் நேற்று இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன.
    • ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு அறிவுறுத்தலின் பேரில் கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அதனை நிறுத்தி போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய போது, கடலூர் புதுநகர் பகுதியில் 7 தனியார் பஸ்கள் , ரெட்டிச்சாவடி பகுதியில் 8 தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் உரிமம் இல்லாத பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் உரமம் மற்றும் உரிய ஆவணத்துடன் சென்று வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி சோதனை செய்தனர்.
    • ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருகிறது.

    விருத்தாசலம்:

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.

    அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டு 50-க்கும் மேற்பட்டோரின் பட்டியலை தயார் செய்தனர்.

    அவர்களின் தற்போதைய நிலை குறித்து விசாரிக்க விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான டெல்டா போலீசார் இன்று காலை தனி வாகனத்தில் புறப்பட்டனர். விருத்தாசலம் நகரம், புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், மணவாளநல்லூர் போன்ற கிராமங்களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது, தலைமறைவாக உள்ள குற்றவாளிகள், அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளனரா? எங்கு பதுங்கியுள்ளனர்? பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? போன்றவை குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி சோதனை செய்தனர். இந்த ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை 6 மணி முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் விருத்தாசலம் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவுகிறது.

    • கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள சந்தி என்று அழைக்கப்படும் சாமிக்கு விளக்கேற்றினர்.
    • வழிபாடு செய்தால் நிச்சயமாக மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் மழை இல்லாமல் விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா நெல் மற்றும் சோளம் ஆகிய பயிர்கள் கருகி முற்றிலும் பாழாகி வருகின்றன.

    மழை பெய்தால் மட்டுமே பயிர் செய்ய முடியும் என்ற சூழலில் வாகையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று நள்ளிரவு ஒன்று திரண்டனர். அவர்கள் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள சந்தி என்று அழைக்கப்படும் சாமிக்கு விளக்கேற்றினர். பின்னர் பூ மாலை அணிவித்து, அதன் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

    அதன் பின்னர் வீடு வீடாக சென்று சமைத்த உணவுகளை பிச்சை எடுத்தனர். அவற்றை சந்தி சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இது போன்ற நிகழ்வுகள் கிராமப்புறங்களில் பஞ்சம் ஏற்படும் போது நமது முன்னோர்களால் நடத்தப்பட்டது. திட்டக்குடி பகுதியில் இது போன்ற நிகழ்வு 100 ஆண்டிற்கு முன்பு நடந்ததாக தங்களின் பெற்றோர்கள் கூறியதாக ஊரில் இருந்த வயதானவர்கள் கூறினர்.

    மேலும், இது போன்ற வழிபாடு செய்தால் நிச்சயமாக மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அதன்படி நள்ளிரவு வழிபாடு முடிந்தவுடன் 2 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை முதல் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை மூடிவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சென்றது. அப்போது, கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    இதையடுத்து அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சினை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். இந்த சாலை குறுகிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் வைடிப்பாக் கம் சாலை அருகே மோரை எவெரட்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் நெல்லிக்குப்பம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், வருவாய் துறை வருவாய் ஆய்வாளர் அன்வர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவ லிங்கம் மற்றும் நந்தியை அகற்ற வலியுறுத்தினர்.அப்போது அங்கிருந்த சுரேஷ் உட்பட 5 பேர், இந்த இடம் அரசுக்கு சொந்த மானது என்பதால் சாமி சிலைகள் வைக்கப்பட்டுள் ளது என போலீசாரிடம் தெரிவித்தனர். யாருடைய இடமாக இருந்தாலும், சாமி சிலைகளை வைத்து வழிபட உரிய அனுமதி பெற வேண்டும். எனவே, இங்கிருந்து சாமி சிலை களை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்த னர்.

    அங்கிருந்தவர்கள் திடீ ரென்று சிவன், நந்தி சிலை களை கட்டிப்பிடித்து போலீ சாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சாமி சிலைகளை அதிரடியாக அகற்றினார்கள். மேலும், அகற்றப்பட்ட சாமி சிலை களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொது மக்கள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் ஒன்றியம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி மேற்கு குறுவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் விவசாயிகள் திடீ ரென்று தாங்கள் கொண்டு வந்த கருகிய மக்கா சோளத் துடன் திரண்டு நின்றனர்.அவர்கள் வைத்தி ருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததா வது:-எங்கள் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் மக்கா சோளம் பயிரிட்டு இருந்தோம். மானாவாரி விவசாயி களான நாங்கள் மழைைய நம்பி வங்கியில் கடன் பெற்று நகைகளை அடகு வைத்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து இருந்தோம். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நாங்கள் பயிரிட்ட மக்காச்சோளம் முழுவதும் கருகி படைப்புழுக்களுக்கு இரையாகி உள்ளது

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம். மேலும் 90 நாளான மக்காச்சோளம் பயிரிட்டு 80 நாட்கள் கடந்த நிலையில் இனி மழை பெய்தாலும் உரிய மகசூல் பெற இயலாத நிலையில் உள்ளோம். ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×