புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார்.
புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற சண்முகநாடார் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது38) என்பவரிடம் இருந்து ரூ.210 பணம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற பூபாலன் (வயது35) கைது செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது பண்ருட்டி எழில் நகரில் மளிகை கடை நடத்தி வரும் அருள் ஜோதி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(52) தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இவர் மீத வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com