என் மலர்
கடலூர்
- தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார்.
- மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார்.
கடலூர்:
புவனகிரி தாலுகா மருதூர் அருகே அம்பாள்புரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் விவசாயி. இவர் மகன் மாதவன் (வயது35) திருமணம் ஆகவில்லை. தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். வயலில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதை நேர்த்தி பயிர்களை பார்ப்பதற்கு சென்றார்.
அப்பொழுது தண்ணீர் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- பாஸ்கருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு.
- அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாஸ்கர்(50) பெயிண்டர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாஸ்கர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் பாஸ்கரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
- சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கும் மருந்து பெட்டகம் திட்டத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் 19 பேருக்கு இருதய ரத்த குழா யில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு இருதய ரத்த குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. மற்ற வர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
மேலும் மாரடைப்பு அறிகுறிகளுடன் பயனாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து அங்கு இருதய பாதுகாப்பு மருந்து கள் வழங்கப்பட்டு மேல் சிகிக்சைக்காக மருத்து வமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவதால் கால தாமதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு துரித சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருந்துகள் அடங்கிய பெட்ட கங்களை 108 ஆம்பு லன்சில் வைத்து கால தாம தத்தை தவிர்க்க வழங்கப் பட்டது. இந்த சேவையை பயன்படுத்தி பொது மக்க ளின் உயிர் காக்குமாறு 108 ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு அறிவுரை வழங்கப் பட்டது.
- தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
- திருவாமூர் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு களை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்- இன்ஸ் பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார் களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
அப்போது கொலை வழக்கில் கைதாகி ஜாமி னில் வந்த தலைமறைவு குற்றவாளி திருவாமூர் மோகன் (வயது 35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பண்ருட்டியில் போலீ சார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “பசுமை தொழில் முனைவு திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்திட பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை மற்றும் பச்சை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விருப்பமுள்ளோர் வருகிற 15 -ந் தேதிக்குள் கடலூர் புதுப்பாளையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம்.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் இன்று பா.ஜனதா கட்சி கொடியேற்றம் நடைபெற இருந்தது.
- பூதாமூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம்:
அனுமதியின்றி கொடியேற்ற வந்தாக பா.ஜ.க சிறுபான்மை நலபிரிவு செயலாளர் தேசிய வேலூர் இப்ராஹிம் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீடு அருகே இருந்த பாரதிய ஜனதா கட்சி கொடி அகற்றப்பட்டது. இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று (1-ந்தேதி) முதல் நாள் ஒன்றுக்கு 100 பா.ஜனதா கொடிகம்பங்கள் ஏற்றப்படும் என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் இன்று பா.ஜனதா கட்சி கொடியேற்றம் நடைபெற இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கட்சி கொடியேற்றுவதற்காக பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்து இருந்தார். ஆனால் கட்சி கொடி கம்பம் மற்றும் கொடியேற்ற அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
எனவே, போலீசார் கட்சி கொடி ஏற்றுவதை தடுத்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இப்ராஹிம் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பூதாமூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
- பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
கடலூர்:
விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.
எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
- இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க பிரமுகர். இவரது மகன் காமராஜ் (வயது 35) இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர். கடந்த மாதம் 26-ந் தேதி காமராஜ் தனது அலுவகத்தில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் காமராஜை சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த அரவிந்தன்(25), இளந்தமிழன்(23), தினேஷ்(31), மனோ என்கிற மணவாளன்(29),காந்தி(23), திருவள்ளுர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின்(31) ஆகியோர் இன்று கடலூர் ஜே.எம். எண்.3 நீதிபதி ரகோத்தம்மன் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எண்ணூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர்.
- இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பிரியாணி கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென்று கடைக்குள் சென்று அன்பளிப்பாக பணம் கேட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த திருநங்கைகள் கடை நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டனர். இதையடுத்து கடை உரிமையாளர் வெளியில் வந்து தேவையற்ற முறையில் கூச்சலிட வேண்டாமென திருநங்கைகளிடம் கூறினார்.இருந்தபோதிலும் திருநங்கைகள் கடைக்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர் தகவலறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஏன் கடை முன்பு நிற்கிறீர்கள்? அனைவரும் கலைந்து செல்லுங்கள் திருநங்கைகளிடம் போலீசார் கூறினர். அப்போது திடீரென்று திருநங்கைகள் புதிதாக கடை திறந்து உள்ளதால் எங்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கினால் ஆசீர்வாதம் செய்வோம். இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் தற்போது யாரும் நிற்க வேண்டாம். முதலில் கலைந்து சொல்லுங்கள் என தெரிவித்தனர். திடீரென்று திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருநங்கைகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் அடுத்த கண்ணாரபேட்டையில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை 2 பேர் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கடலூர் பச்சையாங்குப்பம் சேர்ந்த தீனா (வயது 20), கண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரையும், கஞ்சாவும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திட்டக்குடி புலிகரம்பலூர் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பதும், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
- நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
- பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய விளை நிலம் உள்ளது.இந்த நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.அப்போது அருகில் இருந்த முல்லைத் தோட்டத்தில் இருந்து கூட்டமாக பறந்து வந்த விஷ வண்டுகள்அ ங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி தாக்கியது.
இதில் சுப்பிரமணி (வயது 49),பரமசிவம் (வயது 28) ஜெயக்கொடி, சிவா,பூங்கொடி ஆகிய 5 பேர்படுகாயம் அடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த பரமசிவம் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- புதுப்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் கடைவீதியில் புகையிலை பொருட்கள் விற்ற சண்முகநாடார் நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது38) என்பவரிடம் இருந்து ரூ.210 பணம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற பூபாலன் (வயது35) கைது செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதே போல் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது பண்ருட்டி எழில் நகரில் மளிகை கடை நடத்தி வரும் அருள் ஜோதி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(52) தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இவர் மீத வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






