மருதூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார்.மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார்.
மருதூர் அருகே  மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

கடலூர்:

புவனகிரி தாலுகா மருதூர் அருகே அம்பாள்புரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் விவசாயி. இவர் மகன் மாதவன் (வயது35) திருமணம் ஆகவில்லை. தந்தையுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். வயலில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதை நேர்த்தி பயிர்களை பார்ப்பதற்கு சென்றார்.

அப்பொழுது தண்ணீர் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மோட்டார் கொட்டகைக்கு சென்று மோட்டார் போட முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com