பண்ருட்டி அருகே அக்காள் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பி கைது

தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்ருட்டி அருகே  அக்காள் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பி கைது
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மனைவி (செல்வி,45)இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 2 -ந் தேதி காலை 7 மணிக்கு செல்வி டீக்கடையில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த பழனி கொதிகலனில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து அக்கா செல்வி மீது ஊற்றி, அசிங்கமாக திட்டி,கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பழனியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com