என் மலர்
கடலூர்
- பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
- நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்), உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநர்ராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர்(பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும் இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். மேலும் இப்பயிற்சி யினை பெற்றவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி யினை பெற தாட்கோ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
- 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் பெரிய நரிமேடு கிராமத்தில் வக்கீல் சண்முகத்திற்கு விளை நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் தென்னை மரம், அருகில் இருந்த மின் மோட்டார், மின்சாதனங்கள் போன்றவைகள் சேத மானது. மேலும், அங்கிருந்த 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.
- மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
- வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் கருவூல கணக்குத் துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ் (47). இவர் கடலூர் மாவட்ட கருவூல கணக்கு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனது குடும்பத்தை பிரிந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தோணி சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சகாய ராஜ் தூக்கு ேபாட்டு தற்ெகாலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
- செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மனைவி (செல்வி,45)இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 2 -ந் தேதி காலை 7 மணிக்கு செல்வி டீக்கடையில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த பழனி கொதிகலனில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து அக்கா செல்வி மீது ஊற்றி, அசிங்கமாக திட்டி,கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பழனியை கைது செய்தனர்.
- இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது
- கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கடலூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் நலமுடன் வாழ வேண்டி நடப்போம் நலம் பெறுவோம் என்பதனை வலியுறுத்தி 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி கடலூரில் டவுன் ஹாலில் இருந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று மீண்டும் டவுன் ஹாலில் வந்த முடிவடைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது . வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நடந்து சென்றனர்.
நடந்து செல்லும் பொதுமக்கள் அமர்வதற்கு சிமெண்ட் நாற்காலிகள், குடிநீர், பயோ கழிவறை, தற்காலிக நிழற்குடை போன்றவற்றை அமைத்திரு ந்தனர். மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நடந்து செல்பவர்களுக்கு உற்சாகப்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றது. பொதுமக்கள் சில்வர் கடற்கரையில் இருந்து மிகுந்த ஆசுவாசமாக குளிர்ந்த காற்றில் பொதுமக்கள் ரம்மியமான காட்சிகளை பார்த்தப்படி ஒருவரு க்கொருவர் ஆனந்தமாக பேசிக்கொண்டு சென்றதன் மூலம் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வோடு சென்றனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மாநகர திமுக செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி அகஸ்டின் பிரபாகரன், ஹேமலதா சுந்தரமூர்த்தி, ஆராமுது, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், பாலசுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் ரவி என்பவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கோழி தீவனத்துக்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர். அப்போது ரவிக்கு சொந்தமான இடத்தில் 25 மூட்டையில் 1 ½ டன் ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவியை போலீசார் தேடி வருகின்றனர். இது போன்ற கிராமங்களில் அரிசி வாங்கி கோழி தீவனத்துக்காக கடத்தும் நபர்கள் பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.
- சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
- சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டையில் வானமாதேவி செல்லும் சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் அவ்வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ம் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாளை முதல் வருகிற 6-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் பாதிப்படைந்து வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு- அண்ணாமலைநகர் - 74.2 சிதம்பரம் - 38.6 கடலூர் - 33.4 லால்பேட்டை - 25.0 பரங்கிப்பேட்டை - 22.5 ஆட்சியர் அலுவலகம் - 21.8 காட்டுமன்னார்கோயில் - 17.0 புவனகிரி - 15.0 எஸ்ஆர்சி குடிதாங்கி - 13.5 கொத்தவாச்சேரி - 12.0 மீ-மாத்தூர் - 12.0 சேத்தியாதோப்பு - 8.2 வானமாதேவி - 8.0 வடக்குத்து - 6.4 குறிஞ்சிப்பாடி - 5.0 பண்ருட்டி - 3.0 கீழச்செருவாய் - 3.0 பெல்லாந்துறை - 2.0 விருத்தாசலம் - 1.0 குப்பநத்தம் - 1.0 தொழுதூர் - 1.0 மொத்தம் - 323.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
- பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடு த்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படு த்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்து றையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை கடலூர் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்தி ட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கடலூர் , உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கடலூர்அலுவலகங்களை நேரில் தொடர்பு கொ ள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோ னைகளை வழங்கினார்.
- நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி நுழைவாயிலான ஆல் பேட்டை சாலை சந்திப்பில் பொது போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், இச்சாலை சந்திப்பை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கடலூர், கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக பழைய இரும்பு பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவது தொடர்பாகவும் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள சாலை சந்திப்பை மேம்படுத்துவது குறித்தும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறின்றி இப்பணிக ளை துரிதமாக மேற்கொ ள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வானமாதேவி - 27.2, எஸ் ஆர் சி குடிதாங்கி - 25.5, அண்ணா மலைநகர் - 24.8,சிதம்பரம் - 24.0, காட்டு மன்னார் கோவில் - 22., லால்பேட்டை - 17.0, புவனகிரி - 15.0, 8. சேத்தியாதோப்பு - 15.0,காட்டுமயிலூர் - 15.0, வடக்குத்து - 14.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.6,கொத்தவாச்சேரி - 11.0, ஸ்ரீமுஷ்ணம் - 8.1, பண்ருட்டி - 7.0, பெல்லாந்துறை - 6.2, பரங்கிப்பேட்டை - 6.1, குறிஞ்சிப்பாடி - 3.0,குப்பநத்தம் - 3.0, விருத்தாசலம் - 1.3.மொத்தம் - 270.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
- இவர் பண்ருட்டி உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார்.
- கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர்முருகன் (36), இவர் பண்ருட்டி உளள ேபக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று (1-ந் தேதி) இரவு 1 மணி அளவில் தனது மோட்டாச் சைக்கிளில்பண்ருட்டியில் இருந்து வீரப்பெருமா நல்லூ ருக்கு சென்று கொண்டி ருந்தார். சேமகோட்டை அருகே சென்று கொண்டி ருந்தபோது போது எதிர்பாராத விதமாக வேகத்தடை கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார். இது பற்றி தகவல் அரிந்த தும் புதுப்பேட்டை போலீ சார், முருகன் உடலை கைப்பற்றி பிரதே பரிசோ தனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






