பண்ருட்டி அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்: வாலிபர் கைது

இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்: வாலிபர் கைது
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய3 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சாரங்கபாணி(48). இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 -ந் தேதி சின்னசாமி தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி பில்லர் போடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுப்பையன் மகன் வல்லரசு(20), கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தரணிசெல்வன்(22)நிதிஷ்குமார்(19) ஆகியோர் சின்னசாமி, அவரது மகன் சாரங்கபாணி இருவரையும் அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சின்னசாமி, சாரங்கபாணி இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சாரங்கபாணி,48; புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தனர். மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com