என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமமான 'மோவூர் முட்டம். கால்நாட்டா ம்புலியூர் ,ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வடிகால் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் கீழணை உதவி செயற் பொறியாளர் ெகாளஞ்சிநாதன் முன்னிலையில் குமராட்சி உதவி பொறியாளர் அருளரசன் ஆகியோரின் நேரடி பார்வையில்இந்தப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் தீவிர லாட்டரி, கஞ்சா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா தர்கா எதிரில் டீக்கடை நடத்தி வரும் அப்துல் மத்தின் ( வயது 48) என்பவரும், டீக்கடைஊழியர் பண்ருட்டிஆர். எஸ். மணி நகர்ஜோதி (வயது 49) ஆகிய இருவரும் நல்ல நேரம் லாட்டரி சீட்டு 10, குமரன் லாட்டரி சீட்டு 5,தங்கம் லாட்டரி சீட்டு 5 ஆகிய லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகில் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22),சையத் இப்ராஹிம் (வயது 33)ஆகிய இருவர்களும் நல்லநேரம் லாட்டரி சீட்டு 14, தங்கம் லாட்டரி சீட்டு 5,குமரன் லாட்டரி சீட் 10 ஆகிய லாட்டரி சீட்டு வைத்திருந்தவர்களை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 2 பெண் மற்றும் 3 ஆண்கள் சேர்ந்து தங்க நகைகளை திருடி சென்றது சம்பந்தமாக பண்ருட்டி நகர போலீஸ் நிலையதில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைய ர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பா ர்வையில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப்-இன்ஸ்பெ க்டர்க ள்தங்கவேல், பிரசன்னா ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சி.சி.டி.வி . காமிரா காட்சி மற்றும் சைபர் கிரைம் ஏட்டுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்சளை ம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைம லைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள்என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வேறொரு கொள்ளை வழக்கில் சிதம்பரத்தில் கைதாகிகடலூர் மத்திய சிறையில் இருந்தஇவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பண்ருட்டியில்வக்கீல் ஒரு வீட்டில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.தலைவ ராக உள்ளஇவர்க ளது கூட்டாளிஒருவனிடம் பணம் உள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்துடன் தலைமறை வாகியுள்ளகூட்டாளியை பொறிவைத்து தேடி வருகின்றனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அந்த கம்பெனிக்கு அருகில் உள்ள டீக்கடையில் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டம் ஒலப்பிடுக்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்வாக் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.
அப்போது இவர் களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.பின்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் உள்ள இளம்பெண்ணின் சித்தப்பா வீடான குடி யிருப்புக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ள னர்.தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்ப தாக முகமது அஸ்வாக் மீது இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முகமது அஸ்வாக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய3 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சாரங்கபாணி(48). இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 -ந் தேதி சின்னசாமி தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி பில்லர் போடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சுப்பையன் மகன் வல்லரசு(20), கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தரணிசெல்வன்(22)நிதிஷ்குமார்(19) ஆகியோர் சின்னசாமி, அவரது மகன் சாரங்கபாணி இருவரையும் அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சின்னசாமி, சாரங்கபாணி இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சாரங்கபாணி,48; புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தனர். மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
- தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து வார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதி கர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர்.
- வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை யில் சோதனை சாவடி யில் தினந்தோறும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு ஆல்பேட்டை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சில வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை அழித்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி யது உள்ளிட்ட வழக்கு கள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் பட்டது.
- திட்டக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே100 நாள் வேலை திட்டத்தில் கள ஆய்வின்போது இல்லாத பணியாளர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பு என குறிப்பிடப்பட்டதால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள பணிகளை ஆய்வு செய்வதற்காக மங்களூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பணியில் இல்லாதவர்களை வருகை பதிவேட்டில் விடுப்பு என அறிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவட்டி- திட்டக்குடி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.
- 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
- மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
கடலூர்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இதில் வட்டார இயக்க மேலாளர் சத்திய நாராயணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அருண் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏழுமலை, காவலர்கள் முருகானந்தம், ராஜா , தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சோதனை செய்த போது மூட்டைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது ெதரிய வந்தது. பின்னர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீ சார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் திட்டக்குடி தொழுதூர் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), ஒரங்கூர் சேர்ந்தவர் காளிமுத்து (30) என தெரிய வந்தது. மேலும் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
- கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறபபு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி பண்ருட்டி நகராட்சியில் உள்ள 49 வாக்குச்சாவடி மையங்களில் புதியதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள சுப்பராயலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர் பானுமதி, துப்புரவு அலுவலர் முருகேசன், தேர்தல் துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.
- வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
- இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.இன்று காலை கடலூரை சுற்றியுள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
கடலூர் காரைக்காட்டை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள், பாலூர் பகுதியில் இருந்து வாழை இலைகளை அறுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனைக்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார். அப்போது வாழை இலை கட்டுகளில் இருந்து பாம்பு வெளிவந்து, மீண்டும் உள்ளே சென்று விட்டது. இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார். வாழை இலை கட்டுகளை பிரித்துப் பார்த்து, அதற்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






