search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்திய பா.ம.க. நிர்வாகி திடீர் கைது
    X

    கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் திரண்ட காட்சி.

    போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்திய பா.ம.க. நிர்வாகி திடீர் கைது

    • இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×