தியாகதுருகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
தியாகதுருகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேகப்படு ம்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சங்கராபுரம் பொய் குணம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 30) மற்றும் சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com