என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் ஓசியில் சிகரெட் கேட்டு பெட்டிக் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- ஜனா என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கடலூர் ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த தண்டுபாளையம் காலனியை சேர்ந்த ஜனா (வயது 25) என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார். காசு கொடுத்தால் தருவேன் என பிரவீன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனா, சோடா பாட்டிலை எடுத்து பிரவீனின் தலையில் அடித்து பொருட்கள் தரவில்லை என்றால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசில் பிரவீன் கொடுத்த புகாரின் போரில் பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






