சோழத்தரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின் வாரிய ஊழியர் பலி

மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோழத்தரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மின் வாரிய ஊழியர் பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சேத்தி யாத்தோப்பு மழவராய நத்தத்தை சேர்ந்தவர் பச்ச முத்து (வயது 50). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் கணக்கிட்டு ஆய்வாளராக பணி செய்தார். இவர் நேற்று மாலை 3 மணியளவில் பாளையங் கோட்டை மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பச்ச முத்து மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சமுத்துவின் தலையில் பலத்த காய மடைந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com