கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை: 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடியில் போலீசார் மேற்கொண்ட காட்சி.
கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடியில் போலீசார் மேற்கொண்ட காட்சி.
Published on

கடலூர்:

கடலூர் ஆல்பேட்டை யில் சோதனை சாவடி யில் தினந்தோறும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு ஆல்பேட்டை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சில வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை அழித்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி யது உள்ளிட்ட வழக்கு கள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com