என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ருட்டி பெண்கள் பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்:கடலூர் கலெக்டர் ஆய்வு
- பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
- கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறபபு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி பண்ருட்டி நகராட்சியில் உள்ள 49 வாக்குச்சாவடி மையங்களில் புதியதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள சுப்பராயலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர் பானுமதி, துப்புரவு அலுவலர் முருகேசன், தேர்தல் துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.






