search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive search"

    • போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் அடுத்த கண்ணாரபேட்டையில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை 2 பேர் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கடலூர் பச்சையாங்குப்பம் சேர்ந்த தீனா (வயது 20), கண்ணாரப்பேட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரையும், கஞ்சாவும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திட்டக்குடி புலிகரம்பலூர் சேர்ந்த ராஜ்குமார் (34) என்பதும், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    • ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
    • தீவிர சோதனை

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×