பண்ருட்டி அருகே விஷ வண்டு கொட்டி 2 பெண்கள் உட்பட 5பேர் காயம்:ஆஸ்பத்திரியில் அனுமதி

நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பண்ருட்டி அருகே விஷ வண்டு கொட்டி 2 பெண்கள் உட்பட 5பேர் காயம்:ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய விளை நிலம் உள்ளது.இந்த நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.அப்போது அருகில் இருந்த முல்லைத் தோட்டத்தில் இருந்து கூட்டமாக பறந்து வந்த விஷ வண்டுகள்அ ங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி தாக்கியது.

இதில் சுப்பிரமணி (வயது 49),பரமசிவம் (வயது 28) ஜெயக்கொடி, சிவா,பூங்கொடி ஆகிய 5 பேர்படுகாயம் அடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த பரமசிவம் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com