என் மலர்
கடலூர்
- கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் .
கடலூர்:
தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரததில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார்.
- முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னை வளசரவாக்கம் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 44). இவர் படகு மெக்கானிக்காக இருந்து வந்தார். இந்த நிலையில் கடலூர் முதுநகர் உப்பனாற்றில் படகில் சில நாட்களாக தங்கிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார். அப்போது ஷேக் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே ஓட்டலை சூறையாடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் பகுதியில் காட்டுக்கூடலூர்- விருத்தாசலம் செல்லும் சாலைஅருகே காட்டு கூடலூரைசேர்ந்த பன்னீர்செல்வம் என்ப வர்ஆனந்தாயி அம்மன் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு கடந்த 9-ந் தேதி மதியம் சாப்பிட வந்த பெரிய காப்பான் குளத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் விலை குறைவாக சிக்கன் ரைஸ் கேட்டு வாக்குவாதம் செய்த னர்.இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது காப்பான் குளத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் உள்ள சிலருக்கு போன் செய்து 10-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்து கடையினுள் நுழைந்து உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பா கமுத்தாண்டி குப்பம் போலீசில் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் பேரில் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டஇளையராஜா (35),தீனா(20),ஸ்டாலின்(21),ராக்ராஜ்குமார் (26), சுபாஷ் ( 22 ),பரத் (35)சங்கர் (37)ஆகியோரைகைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவு எதிரிகளை தேடி வருகின்றனர்.
- பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
- மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். திருமணமான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவர் அறிமுகமானார்.
இவர் கணவரை இழந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும் போது சக்திவேலின் ஆட்டோவில் பூமிகா செல்வது வழக்கம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
சக்திவேலின் நண்பர் சுமன். இவர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆவார். இவரும் அடிக்கடி பூமிகாவை ஆட்டோவில் அழைத்து சென்று பேக்கரியில் விடுவதுண்டு.
அப்போது பூமிகாவை, சுமன் விரும்பினார். ஆனால், பூமிகா, ஆட்டோ டிரைவர் சக்திவேலுடன் நெருங்கி பழகுவதை சுமன் அறிந்தார். இது குறித்து நேரடியாக சுமன், தனது நண்பர் சக்திவேலிடம், நான்தான் பூமிகாவை விரும்புகிறேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு சுமன், தனது நண்பர் சக்திவேலிடம் வந்து என்னை மன்னித்து விடு, இருவரும் முன்புபோல் பழகுவோம் என கூறினார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக மது அருந்த போகலாம் என அழைத்தார்.
இதனை நம்பிய சக்திவேல், அவருடன் சென்றார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கு ஏறியதால் அப்போது சுமன் தனது நண்பர் சக்திவேலை பார்த்து இனி, பூமிகா விவகாரத்தில் நீ தலையிடக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு சுமனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமனுக்கு ஆதரவாக பேசினர். ஆத்திரம் அடைந்த அவர்கள் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை காளி கோவில் பகுதியில் சக்திவேல் பிணமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.
இதனையறிந்த சக்திவேலின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பண்ருட்டியில் உள்ள தட்டாஞ்சாவடி-சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது, சக்திவேலின் உறவினர்கள் கூறுகையில், இந்த கொலையில் 4-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். அதோடு பூமிகாவையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உடனே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
- 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ஆடிக்கொண்டு சென்றார்கள். இதனை அதே பகுதியை சேர்ந்த மணிவர்மன் என்பவர் தட்டி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.
இதனை தட்டிக் கேட்ட உறவினர் பன்னீர் செல்வியை அடித்தனர். மேலும் இதனை பார்த்த மணிவர்மன் அண்ணன் அன்பு நேசமணியினை இந்த கும்பல் சரமாரியாக தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த மணிவர்மன் மற்றும் பன்னீர்செல்வி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், திவாகர், மோகன், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார்.
- எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி ரோட்டு பொட்டவெளி சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார். அப்போது மீனை நாய் தூக்கி கொண்டு ஓடிய போது சரவணன் அதனை கல்லால் தாக்கினார். அப்போது அந்த கல் எதிர்பாராமல் எதிர் வீட்டில் பட்டுவிடுகிறது. இதனால் எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரசன்னாவின் உறவினர் அனிதா என்பவர் சண்டையை விளக்கி விடும்போது, சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் அனிதாவை சரமாரி தாக்கி மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது .
இது மட்டுமின்றி இரு தரப்பினருக்குள் கடும் மோதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அனிதா மற்றும் சரவணன் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் அனிதா கொடுத்த புகாரின் பேரில் சரவணன் உள்பட 5 பேர் மீதும், சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா உள்பட 5 பேர் மீதும் என 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பில்லாலியை சேர்ந்தவர் சரளா (வயது 28). இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சந்திரகிரி என்பவர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தட்டி கேட்க சென்ற அவர்களது உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் சந்திரகிரி மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரும்பிலான மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது.
- எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிபுலியூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் மின் கம்பம் உள்ளது. இரும்பிலான இந்த மின் கம்பத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டு இருந்தது. இன்று நண்பகல் 12 மணி அளவில் கோண்டூரைசேர்ந்த முத்துவேல் என்பவர் காரில் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிக்னல் மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் முத்துவேல் அதிர்ச்சிஅடைந்தார். உடனே காரை அவர் நிறுத்தினார்.இந்த இடம் வாகன போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பு ஆகும்.
எனவே சிறிது நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் ேபாக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று போக்குவரத்தினை சரி செய்தனர். இந்த சிக்னல் மின்கம்பம் காரின் முன் பகுதியில் விழுந்ததால் முத்துவேல் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த மின் கம்பம் மண்ணுக்குள் புதைந்து இருந்ததால் துருப்பிடித்து இத்து போய் காணப்பட்டது. இதனால்தான் சிக்னல் மின் கம்பம் சாய்ந்து உள்ளது.
- கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர்.
- சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி கண்டர க்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் மதன்ராஜ் (வயது19) அசாம் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராதா காந்த் (36) இவர்கள் கடந்த15 வருடமாக சேராக்குப்பத்தில் தங்கி சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று கார் சர்வீஸ் சென்டரில் மதன்ராஜ், மற்றும்ராதாகாந்த் ஆகியோர் வேலை பார்த்தனர். அப்போது மின்இணைப்புமீட்டர் பாக்ஸில் எதிர்பாரா தவிதமாக,தண்ணீர் பட்டு மின்சாரம் தாக்கியதில் மதன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார், ராதா காந்த் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராதா காந்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதன்ராஜ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவம னையில்உள்ளது, இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஜெராக்ஸ் போட்டு கொண்டிருந்தபோது அந்த நபர் பையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால் தலையின் பின்பக்கம் தாக்கினார்.
- கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு ஓடினர்.
கடலூர்:
விருத்தாச்சலம் சக்தி நகரில் கமலக்கண்ணி (வயது 50). இவர் தனது பேன்சி கடையில் தனியாக இருந்தபோது ஒரு நபர் கடைக்கு வந்து ஜெராக்ஸ் போட்டு கொண்டிருந்தபோது அந்த நபர் பையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால் தலையின் பின்பக்கம் தாக்கி , கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு ஓடினர்.
உடனே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மர்ம நபரை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்படை தலைமை காவலர்கள் சண்முகநாதன், செல்வகுமார் , ராஜேந்திரன், சுரேஷ், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்தில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டும், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று காலை அண்ணா நகர் பழத்தோட்டம் அருகில் போலீசார் ரோந்து மேற்கொண்டு இருந்தபோது ஒரு நபர் திடீரென்று அங்கிருந்து ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை துரத்தி பிடித்து விசாரணை செய்தனர்
விசாரணையில் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த பிரபா (41), சக்தி நகரில் கடையில் தனியாக இருந்த பெண்ணை சுத்தியால் தாக்கி தாலிச் செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கம்மாபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்ததாகவும் , அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சினையை தீர்க்க சதீஷ் பேன்ஸி ஸ்டோரில் தனியாக இருந்த பெண்ணை சுத்தியால் தலையில் தாக்கி விட்டு , அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு சென்றதாக கூறினார்.
- எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
- வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக அந்த பகுதியில் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் போடப்பட்டு உள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் கண்காணித்து வருகிறார். நேற்று இரவு 3 வாலிபர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். இதனை பார்த்த கிராம மக்கள் அந்த வாலிபர்களை பார்த்து திருடர்கள் வந்து உள்ளனர் என கருதி துரத்தினர். அப்போது அவர்களில் 2 பேர் தலைதெறிக்க ஓடிவிட்டனர். இதில் ஒருவர் சிக்கினார்.
அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஆனால் அந்த வாலிபர் வேதனையால் கதறினார். உடனே கிராம மக்கள் அந்த வாலிபரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் எம்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபு என தெரியவந்தது. இவருடன் வந்த வாலிபர்கள் அந்த பகுதியில் அமர்ந்து மது குடிக்க சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






