என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடலூர் அருகே  இரு தரப்பினருக்குள் மோதல்- 2 பேர் காயம்  10 பேர் மீது வழக்கு
  X

  கடலூர் அருகே இரு தரப்பினருக்குள் மோதல்- 2 பேர் காயம் 10 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார்.
  • எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  கடலூர்:

  கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி ரோட்டு பொட்டவெளி சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியில் மீனை கழுவி கொண்டு இருந்தார். அப்போது மீனை நாய் தூக்கி கொண்டு ஓடிய போது சரவணன் அதனை கல்லால் தாக்கினார். அப்போது அந்த கல் எதிர்பாராமல் எதிர் வீட்டில் பட்டுவிடுகிறது. இதனால் எதிர் வீடு சேர்ந்த பிரசன்னா என்பவர் இதனை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரசன்னாவின் உறவினர் அனிதா என்பவர் சண்டையை விளக்கி விடும்போது, சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் அனிதாவை சரமாரி தாக்கி மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது .

  இது மட்டுமின்றி இரு தரப்பினருக்குள் கடும் மோதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அனிதா மற்றும் சரவணன் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் அனிதா கொடுத்த புகாரின் பேரில் சரவணன் உள்பட 5 பேர் மீதும், சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா உள்பட 5 பேர் மீதும் என 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×