என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was alone girl"

    • ஜெராக்ஸ் போட்டு கொண்டிருந்தபோது அந்த நபர் பையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால் தலையின் பின்பக்கம் தாக்கினார்.
    • கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு ஓடினர்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் சக்தி நகரில் கமலக்கண்ணி (வயது 50). இவர் தனது பேன்சி கடையில் தனியாக இருந்தபோது ஒரு நபர் கடைக்கு வந்து ஜெராக்ஸ் போட்டு கொண்டிருந்தபோது அந்த நபர் பையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால் தலையின் பின்பக்கம் தாக்கி , கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு ஓடினர். 

    உடனே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மர்ம நபரை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்படை தலைமை காவலர்கள் சண்முகநாதன், செல்வகுமார் , ராஜேந்திரன், சுரேஷ், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்தில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டும், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று காலை அண்ணா நகர் பழத்தோட்டம் அருகில் போலீசார் ரோந்து மேற்கொண்டு இருந்தபோது ஒரு நபர் திடீரென்று அங்கிருந்து ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை துரத்தி பிடித்து விசாரணை செய்தனர்

    விசாரணையில் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த பிரபா (41), சக்தி நகரில் கடையில் தனியாக இருந்த பெண்ணை சுத்தியால் தாக்கி தாலிச் செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கம்மாபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்ததாகவும் , அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சினையை தீர்க்க சதீஷ் பேன்ஸி ஸ்டோரில் தனியாக இருந்த பெண்ணை சுத்தியால் தலையில் தாக்கி விட்டு , அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு சென்றதாக கூறினார்.

    ×