என் மலர்
நீங்கள் தேடியது "Front Enmity"
- வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
- 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ஆடிக்கொண்டு சென்றார்கள். இதனை அதே பகுதியை சேர்ந்த மணிவர்மன் என்பவர் தட்டி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.
இதனை தட்டிக் கேட்ட உறவினர் பன்னீர் செல்வியை அடித்தனர். மேலும் இதனை பார்த்த மணிவர்மன் அண்ணன் அன்பு நேசமணியினை இந்த கும்பல் சரமாரியாக தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த மணிவர்மன் மற்றும் பன்னீர்செல்வி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், திவாகர், மோகன், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






