கடலூர் அருகே உப்பனாற்றில் தவறி விழுந்த படகு மெக்கானிக் சாவு

படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார். முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உப்பனாற்றில் தவறி விழுந்த படகு மெக்கானிக் சாவு
Published on

கடலூர்:

சென்னை வளசரவாக்கம் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 44). இவர் படகு மெக்கானிக்காக இருந்து வந்தார். இந்த நிலையில் கடலூர் முதுநகர் உப்பனாற்றில் படகில் சில நாட்களாக தங்கிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார். அப்போது ஷேக் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com