என் மலர்tooltip icon

    கடலூர்

    • செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . நேற்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இறந்து போனவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு மதுரா துண்டு காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவர் தினமும் காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல அவர் வீட்டை பூட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராசு வீட்டினுள் நுழைந்து டேபிளில் உள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.15,000 திருடி சென்றனர்.

    ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை வீடு திரும்பிய விவசாயி ராசு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 255 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
    • அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை கட லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 532 மாணவ, மாணவிகள் எழுதினர்.இவர்களில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 266 பேர், அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 65 பேர், அரசு உதவி பெறும் பள்ளி களைச் சேர்ந்தவர்கள் 21 பேர், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 180 பேர் ஆவார்கள். நீட் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியான மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றவர்களின் பட்டியலை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்டது.

    அதன்படி, அரசுப்பள்ளி மாணவர்களில் 64 பேர் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி யைப் பெற்றனர். மேலும், 12 பேர், இந்த ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதேபோல, அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்தவர்களில் 33 பேர் அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ள நிலையில், 4 பேர் நேரடியாக மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றனர். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த வர்களில் 10 பேரும், மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 132 பேரும் விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் உள்ளது.
    • இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளைகாய்கறி மார்க்கெட்டில்மீன் மார்க்கெட் உள்ளது.இது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடை வைத்துள்ள மின் வியாபாரிகளிடம் குறைகள் கேட்டார்.

    பழுதடைந்துள்ள மீன் அங்காடியைஉடனடியாக பழுது நீக்கி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவருடன்நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகேசன்,துப்புரவு அலுவலர் ஜெயச்சந்திரன் கவுன்சிலர் சோழன், திமுக பிரமுகர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சுபயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் போன்ற பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் விதமாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் கீழ்க்காணும் தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர்சாதனப்பெட்டி, பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிலம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சாரபேட்டரி பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல், மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரிசார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல்,

    தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சுபயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் போன்ற பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவிஇயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தனபால்.
    • இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முதியவர் தனபால் (வயது 85). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனபால் வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு–வலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வந்தன. அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் குப்பைகள் அகற்ற வேண்டுமானால் அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு ஊழியர்கள் அகற்றி செல்வது வழக்கம். ஆனால் அந்தப் பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பதன் பேரில் குப்பைகள் அகற்றுவது அனைவரும் அறிந்ததாகும். ஆனால் மாவட்ட தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏன் சரியான முறையில் அகற்றவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் மாவட்டத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்த–ப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடி–யாக அகற்றி சுகாதார–மாக பேணி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் காய்ச்சல் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு வரும் காய்ச்சல் உடனடியாக சரியாக வில்லை.

    அதற்கு மாறாக காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டால் பலருக்கு வைரல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரை உட்கொண்டு வருவதை காண முடிகிறது. மேலும் தற்போது பரவக்கூடிய இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலின் வீரியம் குறையாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    இது மட்டும் இன்றி ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது சில தினங்களாக தொடர் மழையும், காலை நேரங்க ளில் வெயில் அடித்து வருவதால் சீதோசனம் மாற்றம் காரணமாக இந்த காய்ச்சல் பரவுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி காய்ச்சல் ஏற்பட்ட வர்களுக்கு சளி, இரும்பல் போன்ற நோய்களும் ஏற்பட்டு அவதியடைந்து வருவதை யும் காணமுடிகிறது. இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக் கொண்டு சிகிச்சை க்காக காத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இதுபோன்ற காய்ச்சல் திடீரென்று அதிகரித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தனி கவனம் செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து குடிக்கும் தண்ணீரில் பிரச்சனையா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார்.
    • வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணதாசன், வளர்மதிடம் 75 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக குழுவில் கண்ணதாசன் பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வளர்மதி பணத்தை கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணதாசன் மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வளர்மதி, பழனிவேல், சந்துரு, சாரதி மற்றும் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் கண்ணதாசன், காளிமுத்து என 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி ராயல்நகரை சேர்ந்தவர் குமார்.
    • கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் உள்ள மகாலட்சுமி ராயல்நகரை சேர்ந்தவர் குமார். லேத்பட்டரை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஷாகிராபானு. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பரத் (வயது 14) என்ற மகனும், மேகவர்சனி (12) என்ற மகளும் இருந்தனர்.

    கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து வந்தனர். நேற்று இரவும் பிரச்சினை வெடித்தது. இதனால் மனமுடைந்த ஷாகிராபானு தற்கொலை செய்வது என முடிவு செய்தார். தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வீணாகிவிடுமே என நினைத்த ஷாகிராபானு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இரவு மனதை கல்லாக்கி கொண்டு மகன் பரத், மகள் மேகவர்சனி ஆகியோரை தனித்தனியாக கயிறில் தூக்கில் தொங்க விட்டார். இதில் 2 குழந்தைகளும் துடிக்க துடிக்க இறந்தது. அதன் பின்னர் ஷாகிராபானு மற்றொரு கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இன்று காலை வீட்டின் அறை கதவு திறக்கப்படாததால் குமார் சந்தேகமடைந்தார். அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

    தகவல் அறிந்த விருத்தா சலம் போலீசாரும் அங்கு விரைந்தனர். கதவை உடைத்து 3 பேரின் உடலை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் பாரதிய ஜனதா தலைவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை சலங்கைகாரன் தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். நேற்று இரவு இவர் கட்சி பொதுகூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது காரை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவு நேரம் பயங்கர வெடிசத்தம் கேட்டது. அந்த பகுதியில் இருந்து நெருப்பு பற்றி எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    வீட்டில் தூங்கிய தாமரை முருகன் அதிர்ச்சியடைந்து வெளியே வந்தார். அப்போது கார் பற்றி எரிவதை கண்டு பதறிபோனார். உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் காரின் பின்பக்க டயர் எரிந்து நாசமானது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

    தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, பரங்கிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருப்பது தெரியவந்தது. அதற்கான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சக்திவேல் அடிக்கடி பூமிகாவை தனது ஆட்டோவில் பேக்கரியில் விடுவது உண்டு.
    • சம்பவத்தன்று சுமன் தனது நண்பரான சக்திவேலை மதுகுடிக்க போகலாம் என பேசி அழைத்தார். இதனை நம்பிய சக்திவேல் அவருடன் சென்றார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. நேற்று காலை சக்திவேல் தட்டாஞ்சாவடி காளிக்கோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது.

    பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பூமிகா திருமணமான இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அழகியாக சித்தரித்து சினிமா நடிகைபோல் பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார். இந்த விவகாரம் பூமிகாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே பூமிகா கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்துவந்தார்.

    அப்போது கொலை செய்யப்பட்ட சக்தி வேலுக்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் பூமிகா பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வந்தார்.

    அப்போது சக்திவேல் அடிக்கடி பூமிகாவை தனது ஆட்டோவில் பேக்கரியில் விடுவது உண்டு.

    சக்திவேலின் நண்பர் சுமன் ஆட்டோ டிரைவரான இவர் பண்ருட்டி களத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர். இவரும் பூமிகாவின் இன்ஸ்டாகிராமை பார்த்துள்ளார்.

    எனவே சுமன், பூமிகாவின் அழகில் சொக்கிபோனார். பூமிகாவை ஆட்டோ டிரைவர் சுமன் தொடர்பு கொண்டு பேசினார். இனிக்க இனிக்க பேசியதால் பூமிகா சுமனின் பேச்சில் மகுடி பாம்புபோல் மயங்கினார். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். அதோடு கொலை செய்யப்பட்ட சக்திவேலுடன் இருந்த தொடர்பையும் பூமிகா விடவில்லை.

    இந்த விவகாரம் சுமனுக்கு தெரியவந்தது. உடனடியாக சுமன் நேரடியாக தனது நண்பர் என்றும் பாராமல் இன்ஸ்டாகிராம் காதலிக்காக சக்திவேலை கண்டித்தார். ஆனாலும் சக்திவேல்-பூமிகா 2 பேரும் தொடர்ந்து ஆட்டோவில் சுற்றி வந்தனர். இந்த தகவல் சுமனுக்கு எட்டியது. எனவே தனது நண்பர் சக்திவேலை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார்.

    அதன்படி சுமன் தனது கூட்டாளிகளிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். சம்பவத்தன்று சுமன் தனது நண்பரான சக்திவேலை மதுகுடிக்க போகலாம் என பேசி அழைத்தார். இதனை நம்பிய சக்திவேல் அவருடன் சென்றார்.

    பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் மது அருந்தினர். போதை தலைக்கு ஏறியதால் சுமன் மீண்டும் சக்திவேலை பார்த்து பூமிகாவுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மறைந்திருந்த சுமனின் கூட்டாளிகள் 3 பேர் ஓடி வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடிக்க இறந்துபோனார். மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.

    தலைமறைவாகி உள்ள பூமிகாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் மேலும் உண்மை நிலவரம் தெரியவரும். இது தொடர்பாக தனிப்படை போலீசார் சக்திவேலை கொலை செய்ததாக சுமன், வசந்தகுமார், குணா, பட்டீசா குணா ஆகியோரை கைது செய்தனர். கைதான அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×