search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol bomb blast"

    • போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கவர்னர்-தமிழக காவல்துறை இடையே காரசாரமான அறிக்கை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விவகாரத்தில் கவர்னர் கேட்பது என்ன? காவல்துறை தரப்பில் கூறி வரும் விளக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.

    * கவர்னர் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளதாகவும், 1-ம் எண் வாயில் வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு பதில் அளித்து உள்ள காவல்துறையினர் கவர்னர் மாளிகையினுள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய முற்பட்டதாகவும் பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அவதூறாக மிரட்டல் விடுத்து பேசி வருகிறார்கள். தர்மபுரம் ஆதின நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க சென்ற போது கல்-தடியால் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில் கவர்னரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. கவர்னரின் வாகனம் சென்ற பிறகே சிலர் கருப்புக் கொடிகளை சாலையில் வீசினார்கள்.

    இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * கவர்னர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 124 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூறி இருந்த போதிலும் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாசக்கார செயலாக வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என்று கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்து உள்ள காவல் துறையினர், காவலர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட்டதால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    124 சட்டப்பிரிவு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    * போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு விளக்கம் அளித்துள்ள போலீசார் கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் பாரதிய ஜனதா தலைவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை சலங்கைகாரன் தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். நேற்று இரவு இவர் கட்சி பொதுகூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது காரை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவு நேரம் பயங்கர வெடிசத்தம் கேட்டது. அந்த பகுதியில் இருந்து நெருப்பு பற்றி எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    வீட்டில் தூங்கிய தாமரை முருகன் அதிர்ச்சியடைந்து வெளியே வந்தார். அப்போது கார் பற்றி எரிவதை கண்டு பதறிபோனார். உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் காரின் பின்பக்க டயர் எரிந்து நாசமானது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

    தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜா, பரங்கிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருப்பது தெரியவந்தது. அதற்கான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திண்டிவனம் ரோசனை அம்பேத்கர் சிலை அருகே உள்ள ராஜ்குமார் வீட்டிலும் மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.
    • அந்த சமயம் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் காந்தி சிலை அருகே மாரிசெட்டிகுளம் ரோசணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). திண்டிவனத்தில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    அப்போது மர்மநபர்கள் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் கடை தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி கடையின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடைக்கு வந்தார். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து ரோசணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சிறிது நேரத்தில் திண்டிவனம் ரோசனை அம்பேத்கர் சிலை அருகே உள்ள ராஜ்குமார் வீட்டிலும் மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். அந்த சமயம் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 26) என தெரியவந்தது. தகவல் அறிந்த திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேகுப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரவீனை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட மர்மநபர் எதற்காக பெட்ரோல் குண்டு வீசினார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×