என் மலர்
கடலூர்
- இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார்.
- அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணா தேவன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரன் தந்தை தட்சிணாமூர்த்தி என்பவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருணா தேவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரனை திடீரென்று தாக்கி கத்தியால் வெட்டினர்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அருணா தேவன், ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- அரங்கநாதன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
- அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த சிறு–தொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அரங்க–நாதன் (வயது 41). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், கொள்ளுகாரன் குட்டையில் கிராமியம் என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடைக்கு அதே ஊரை சேர்ந்த சக்தி என்ற சாமிநாதன் என்பவர் 7 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து உரிமை யாளர் அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.
பணம் தர மறுத்த அரங்கநாதனை அபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த இரும்பு பைப், கட்டை போன்ற ஆயுதங்களால் கடை–யின் ஜன்னல் கண்ணாடி, டேபிள், சேர், அடுப்பு ஆகியவற்றை உடைத்து சூறையாடிவிட்டு ஓடி–விட்ட–னர். இது குறித்து அரங்க–நாதன் முத்தாண்டிக் குப்பம் போலீசில் புகார்கொடுத்தார். முத்தாண்டி குப்பம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டலை அடித்து உடைத்த– தாக வடக்குத்து கார்த்தி என்ற ராகவன் தோப்புக் கொல்லை கவியரசன், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
- தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 33) இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் (27) இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்னதாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்திலுக்கு முத்துவிற்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செந்திலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காடம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
- வெளிநாட்டுக்கு சென்ற பிறகும் சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
வேப்பூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறைஞ்சி பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சிரஞ்சீவி (வயது 35). இவருக்கும், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியை சேர்ந்த கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண், பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தனது கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படத்தை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டார்.
இதற்கிடையே முகநூலில் வந்த ஆபாச புகைப்படத்தை காண்பித்து, சிரஞ்சீவியின் தந்தை முனியன், தாய் அங்கம்மாள், மனைவி ரஞ்சிதகுமாரி மற்றும் இறைஞ்சியை சேர்ந்த காசியம்மாள், மணிகண்டன் ஆகியோர் அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிரஞ்சீவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
- கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்த பழமலை என்பவரின் மகன் தேவேந்திரன் (வயது 27). இவர் வேப்பூர் பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என வாட்ஸ் அப் குழுவில், குழுவின் அட்மினாக இருந்துள்ளார். அதன் மூலம் கலவரம் நடக்க இவர் காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.
தேவேந்திரனையும் போலீசார் தேடிவந்தனர். இதனை அறிந்த தேவேந்திரன் நேற்று மாலை விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்னலட்சுமி முன்னிலையில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்த தேவேந்திரனை 2 நாட்கள் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி அன்னலட்சுமி உத்தரவிட்டார். இதனை யடுத்து போலீசார் தேவே ந்திரனை விரு த்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
- சீனிவாசன் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (59).திருமணமாகாதவர். இவர் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கதர் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். சீனிவாசனை இவரது வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்கியவாறு உடலை திருவண்ணாமலை போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை போலீசார் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் சீனிவாசன் எப்படி இறந்தார்?யாரேனும் இவரை கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிபுலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 19). இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் கம்மியம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு லாரிகளை சிறை பிடித்தனர்.
- மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏராளமாக உள்ளது.
இங்குள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளை காலை நேரத்தில் பள்ளியில் விடவும், மாலை நேரத்தில் அவர்களை அழைத்து செல்லவும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் வந்து செல்கிறார்கள்.
இதனால் இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் ரெயில்வே கேட் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இங்குள்ள ஜவான் பவான் பைபாஸ் சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் இங்குள்ள சிப்காட் பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்த கனரக வாகனங்கள் அதிக அளவு பாரத்தை ஏற்றி வருவதுடன் அதி வேகமாகவும் செல்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் போலீசில் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் கவுன்சிலர் சரவணன் தலைமையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த லாரிகளையும் சிறை பிடித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. இதனை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.
மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவர் சுமன் என்பவருக்கு பூமிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
- சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி பூமிகா (வயது 23). இவர் இன்ஸ்டாக்கிராமில் நடிகைபோல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம் இவருக்கு பலர் இணைப்பில் இருந்தனர். இதனை அறிந்த கணவர் பிரகாஷ் கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின்னர் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
அப்போது பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும்போது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே சக்திவேலை பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் தன்னை அழகு பெண்ணாக சித்தரித்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவந்தார். அப்போது சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவர் சுமன் என்பவருக்கு பூமிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
இதன் காரணமாக சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சக்திவேலை சுமன் வெட்டி கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதனை அறிந்த இன்ஸ்டாகிராம் காதலி பூமிகா திடீரென மாயமானார். நேற்று பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கிகிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பூமிகாவை தூக்கிகொண்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- புவனகிரி போலீஸ் சரகம் அழிச்சியகுடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஏற்றப்பட்ட பா.ம.க. கொடியை மர்மநபர்கள் அறுத்து வீசி உள்ளனர்.
- வழக்குபதிவு செய்த போலீசார் பா.ம.க. கொடியை அறுத்து வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி போலீஸ் சரகம் அழிச்சியகுடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்மநபர்கள் அந்த கொடியை அறுத்து வீசி உள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற பா.ம.க.வினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பா.ம.க.வினர் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கிழிக்கப்பட்ட பா.ம.க. கொடியை கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் பா.ம.க. கொடியை அறுத்து வீசிய மர்மநபர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
- மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆண்டி குப்பத்தை சேர்ந்தவர் காசி இவரது மகன் வினோத்குமார் (வயது 27) திருமண மாகாதவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார். தாயார் பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட தொழிலாளி வினோத்கு மார் அங்கு சிகிச்சை பலனளிக் காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.இது குறித்து காடாம் புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






