search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  மாமுல்கேட்டு ஓட்டலை சூறையாடிய 3 பேர் அதிரடிகைது
    X

    அடித்து உடைக்கப்பட்ட ேஹாட்டலில் பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

    பண்ருட்டியில் மாமுல்கேட்டு ஓட்டலை சூறையாடிய 3 பேர் அதிரடிகைது

    • அரங்கநாதன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
    • அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறு–தொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அரங்க–நாதன் (வயது 41). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், கொள்ளுகாரன் குட்டையில் கிராமியம் என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடைக்கு அதே ஊரை சேர்ந்த சக்தி என்ற சாமிநாதன் என்பவர் 7 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து உரிமை யாளர் அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    பணம் தர மறுத்த அரங்கநாதனை அபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த இரும்பு பைப், கட்டை போன்ற ஆயுதங்களால் கடை–யின் ஜன்னல் கண்ணாடி, டேபிள், சேர், அடுப்பு ஆகியவற்றை உடைத்து சூறையாடிவிட்டு ஓடி–விட்ட–னர். இது குறித்து அரங்க–நாதன் முத்தாண்டிக் குப்பம் போலீசில் புகார்கொடுத்தார். முத்தாண்டி குப்பம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டலை அடித்து உடைத்த– தாக வடக்குத்து கார்த்தி என்ற ராகவன் தோப்புக் கொல்லை கவியரசன், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×